தர்பூசணி ஜூஸ்

12 comments
கோடையில அதிகமா விளையிற கொடிதாவரம் தர்பூசணி.அது இப்ப எங்க ஊர்ல அதிகமா மார்கெட்ல மலைமலையா குவிஞ்சு விற்பனைக்கு வந்திருக்கு.இந்த பழம் நம்ம ஆரோக்கியத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லதுங்க.இதுல நீர்சத்து நிறைய இருக்கிறதுனாலே உடலுக்கு குளிர்ச்சியை தரும்.விட்டமின் நிறைந்ததும் கூட.மலச்சிக்கலை தீர்க்கும்.பசியை தூண்டும்.சீசனில் கிடைக்கும் பழங்களை நாம் பயன் படுத்திக்க வேண்டும்.மருத்துவ ரீதியா இந்தப்பழ ஜூஸ் உடன் மிளகு பொடி,சீரகபொடி சேர்த்து சாப்பிடலாம்.சுவைக்காக சாப்பிட ஜூஸ் உடன் தேன்,அல்லது சர்க்கரை உடன் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம்.

தேவையானவை:-
 • தர்பூசணி துண்டு                  - ஒன்று 
 •  சர்க்கரை                                  - சிறிது 
 •  எலுமிச்சை  சாறு                 - அரை ஸ்பூன் 
 •  ஐஸ் க்யூப்                                - நான்கு 

செய்முறை:-
 • தர்பூசணியை தோல் சீவி சதை பகுதியை மட்டும் தனியாக எடுக்க வேண்டும்.
 •  சதை பகுதியை சிறு துண்டுகளாக வெட்டி முறுக்கு பிழியும் அச்சில் போட்டு பிழிந்தால் சாறு தனியாக விதை தனியாக வந்துவிடும்.
 • பிழிந்த சாற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து கரைய விட்டு ஐஸ் கியூப் உடன் கிளாசில் ஊற்றி பரிமாற வேண்டும்.

12 comments:

 1. சூப்பர் ஜூஸ்.தகவல்களுடன்..அருமை.

  ReplyDelete
 2. ஆசியா..வருகைக்கு மிக்க மகிழ்ச்சி !

  ReplyDelete
 3. கூல் தர்பூசணி ஜூஸ் சூப்பர்

  ReplyDelete
 4. சம்மருக்கு ஏற்ற அருமையான ஜூஸ்.

  ReplyDelete
 5. நன்றி ஸாதிகா.:)

  ReplyDelete
 6. காஞ்சனா,சௌம்யா, வருகைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 7. ஜில் ஜில் தகவல்களுடன் ஜில் ஜில் ஜூஸ்..

  ReplyDelete
 8. வருகைக்கு மிக்க நன்றி மலர்.:)

  ReplyDelete
 9. நல்ல குறிப்பு ராதா. ஜில்ல்ல்ல் ;)

  ReplyDelete
 10. வருகைக்கு மிக்க நன்றி இமா..

  ReplyDelete
 11. மிக்ஸ்யில் அடித்து பழக்கமாகிவிட்டது மின் தடையின் போதுதான் இந்த முறுக்கு பிழியும் ஆச்சு நினைவுக்கு வருகிறது தகவலுக்கு நன்றி ......

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)