ஜில்ஜில் ஜிகர்தண்டா

14 comments
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜிகர்தண்டா பதிவோட உங்க அனைவருக்கும் வணக்கம்.சந்தர்ப்ப சூழ்நிலையோட கேமிரா ரிப்பேரும் சேர்ந்து பதிவே போட முடியல்லை.இப்ப அடிக்கிற வெயிலுக்கு மக்கள்ஸ் எல்லாருக்கும் ஆரோக்கியத்துல பல பிரச்சினைகள் வரும்.வாய் புண், வயிற்றுப்புண்,சிறுநீர் இறங்குவதில் பிரச்சினை,அதிகமாக தலைமுடி உதிர்தல்,இப்பிடி பல பிரச்சினைகள் வரும்.இதற்கெல்லாம் தீர்வு உணவே மருந்துதான்..இந்த வெயிலுக்கு தண்ணி பழம்,நுங்கு,இளநீர்,மோர்,சாப்பிடலாம்.இதோட வீட்டில நாமளே ஜிகர்தண்டா செய்து சாப்பிடலாம்.இதுல சேர்க்கிற ரோஸ் சிரப், நன்னாரி,பாதாம் பிசினால உடற்சூடு குறையும்.
தேவையான பொருட்கள் (நான்கு நபர்களுக்கு ):-
 • பாதாம் பிசின்                      - இரண்டு கட்டிகள்
 • ரோஸ் சிரப்                          -  எட்டு துளிகள்
 •  பால்                                        - 400 மில்லி
 •  நன்னாரி சிரப்                     - 4 குழி கரண்டி
 •  ஐஸ் க்யூப்                            -6 

செய்முறை:-
 • பாதாம் பிசினை  நன்றாக கழுவி விட்டு எட்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். 
 • ஊறிய பின் பாதாம் பிசின் நன்றாக பூத்து அளவில் அதிகமாக இருக்கும்.
 • ஒரு கிளாஸில் ஊறிய பாதாம் பிசின் சிறிது போட்டு இரண்டு துளிகள் ரோஸ் சிரப்,ஒரு குழி கரண்டி நன்னாரி சிரப்,நூறு மில்லி பால் சேர்த்து ஸ்பூனால் நன்றாக கலக்கி விட்டு இறுதியில் ஐஸ் கியூப்பை சேர்க்க வேண்டும்.
 • தேவை பட்டால் ஐஸ் கிரீம்  சேர்த்து கொள்ளலாம்.

14 comments:

 1. ஆஹா....

  நாளைக்கே எல்லா பொருளும் வாங்கிட்டு வரணும் ராதா (புது வீடுக்கு குடியேறியிருக்கேன். ப்ரிட்ஜ் இன்னும் வாங்கல) ஓசிக்கி பக்கத்து வீட்டில் அடிச்சாவது..... ஹி..ஹி... செஞ்சுடுறேன்

  ReplyDelete
 2. ஆமி..பரமக்குடியில தான இருக்கீங்க.எந்த ஊர்ல இருந்தாலும் தேடி பிடிச்சு பொருளை வாங்கி செய்து பார்த்துடுங்க..:)

  ReplyDelete
 3. சூப்பர்.எனக்கு ஒரு கப பார்சல்.

  ReplyDelete
 4. ஆசியா..ஜிகர்தண்டா பார்சல் அனுப்பிட்டேன்.என்ஜாய்...:)

  ReplyDelete
 5. நல்ல குறிப்பு சீகிரம் செய்து பர்துவிட வேண்டியதுதன்.... ஒரு சந்தேகம்... பாதாம் பிசின் ஒவ்வொரு முறையும் ஊரவைகனுமா?

  ReplyDelete
 6. பாதாம்பிசினை ஊற வைத்து பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.இரண்டு, மூன்று நாட்களுக்கு வைத்திருக்கலாம்.பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 7. நான் நன்னாரி தனியகா ரோஸ் சிரப் தனியாக் செய்வேன்.
  பார்க்கவே சூப்பராக இருக்கு குடித்தால் ஆகா

  ReplyDelete
 8. வருகைக்கு நன்றி ஜலீலா..

  ReplyDelete
 9. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்.....

  ReplyDelete
 10. வணக்கம் ராதா ராணி.
  எனக்குப் பிடித்த ஜிகிர்தண்டாவை எப்படிச் செய்வது என்று எழுதி உள்ளீர்கள்.
  இத்தனை சுலபமா என்று நினைக்க வைக்கிறது!

  இதில் பழங்கள் ஏதாவது சேர்க்கலாமா?

  பாராட்டுக்கள்!

  ranjaninarayanan.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. என்தளத்திற்கு வருகை தந்த ரஞ்சனி மேடம்.. தங்களின் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. விரும்பினால் பழங்கள் சேர்க்கலாம். ஆப்பிள் பொடியாக அரிந்து சேர்த்தால் அருமையாக இருக்கும். வருகைக்கு மிக்க நன்றி.

   Delete
 11. எனக்கு இது ரொம்ப பிடிக்கும்...
  http://recipe-excavaotor.blogspot.com

  ReplyDelete
 12. ஏற்கனவே படித்திருக்கிறேன். புக் மார்க் செய்யாததால் ரொம்பவும் தேட வேண்டியதாகிவிட்டது. புக் மார்க் செய்துகொள்ளுகிறேன்.

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)