அவல் கட்லட்

4 comments
தேவையான பொருட்கள்:-
  • அவல்              - 1கப்
  • உருளை கிழங்கு   - 2
  • காரட்                - 1
  • மல்லி இலை       - சிறிது
  • பிரட்                - 3
  • உப்பு                - சிறிது
  • மிளகாய் பொடி     - 1 ஸ்பூன்
  • பூண்டு              - 5 இதழ்
  • எண்ணெய்          - தேவையான அளவு
செய்முறை:-
  • உருளைகிழங்கை நன்கு வேக வைத்து கொள்ளவேண்டும்.காரட்டை துருவி கொள்ளவேண்டும்.
  • அவலை கழுவி வடித்து கொள்ளவேண்டும்.
  • பிரட் துண்டுகளை மிக்சியில் தூளாக்கி கொள்ளவேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல் வேக வைத்த கிழங்கை சேர்த்து உப்புடன் பிசைந்து அதனுடன் துருவிய காரட்,பொடியாக நறுக்கிய மல்லி இலை,பொடியாக நறுக்கிய பூண்டு இவைகளையும் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
  • பிசைந்த மாவில் சிறிது எடுத்து உருண்டையாக்கி தட்டையாக தட்டி அதை பிரட் தூளில் பிரட்டி எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு முறுகலாக வந்த உடன் எண்ணெய்யை வடித்து தட்டில் போட வேண்டும்.
  • அவல் கட்லட் தயார்...
  • இதை சூடாக தக்காளி சாஸ் உடன்,மல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

4 comments:

  1. முறுகலான அவல் கட்லட் சூப்பர்.சேர்த்திருக்கும் பொருட்களே சூப்பர் சுவையை தரும்.

    ReplyDelete
  2. அவல் கட்லட் சூப்பர்.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி ஆசியா.
    வருகைக்கு நன்றி காஞ்சனா.

    ReplyDelete
  4. அவல் கட்லட் சூப்பர் அக்கா . நான் செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)