திரும்பிப்பார் பொரியல்

12 comments
தலைப்பே  வித்யாசமான பேரா இருக்குனு  நினைக்கிறீங்களா.. எங்க ஊர்ல இந்த பொரியலுக்கு  இதுதாங்க பேர்.:) நான் செய்த பொரியலில் இரண்டு காய்தான் சேர்த்துள்ளேன். ஆனால் இதனுடன் குடைமிளகாய், அல்லது  பீன்ஸ் சேர்த்து  செய்வார்கள். மூன்று காய் பேர் சேர்த்து சொன்னால் நீ....ளமா இருக்கும்னு  இப்பிடி ஒரு பேர் வச்சாங்களோ  என்னவோ.. இரண்டு, மூன்று காய்  இருப்பதால் கலர்புல்லா இருக்கும்.. என்ன என்ன காய்னு  யாரையும் பார்க்க வைப்பதனால்  இந்த பெயர் வந்திருக்கலாம். எதுக்கு இவ்வளவு பில்டப்னு நீங்க கேட்குறது  என் காதுல விழுது...ஏன்னா பதிவ  படிச்சிட்டு  அதென்ன  திரும்பி பார்..! அப்பிடின்னு  யாராச்சும் கேட்டீங்கன்னா .. :)
தேவையான பொருட்கள்:-
 • காரட்                               - 200 கிராம்
 • முட்டைகோஸ்            - 200 கிராம்
 • சின்ன வெங்காயம்     - 10
 • பச்சை மிளகாய்           - 4
 • தேங்காய்                      - சிறிது
 • கடுகு,உளுந்து             - 1 ஸ்பூன்
 • சீரகம்                            - 1 ஸ்பூன்
 • உப்பு                             - சிறிது
செய்முறை:-
 • காரட்டையும் முட்டைகோசையும் பொடியாக  துருவிக்கொள்ள வேண்டும். வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடான உடன் கடுகு, உளுந்து போட்டு வெடிக்க விட்டு வெட்டி வைத்த வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
 • வெங்காயம் வதங்கிய உடன் முட்டைகோஸை போட்டு வதக்க வேண்டும்.
 • முட்டைகோஸ் முக்கால் பாகம் வெந்த உடன் காரட்டை போட்டு வதக்க வேண்டும்.
 • இரண்டும் வதங்கிய உடன் மிக்சியில் அரைத்து வைத்த தேங்காய் , சீரக கலவையை போட்டு தேவையான உப்பையும் போட்டு நன்கு பிரட்டி விடவேண்டும்.
 • 2 நிமிடம் வதக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
 • திரும்பிப்பார்பொரியல் தயார்.

12 comments:

 1. வழக்கமான பொரியல் தான் என்றாலும் வித்தியாசமான பெயரை தலைப்பாக வைத்து கலக்கி விட்டீர்கள் ராதா! விளக்கப்படங்களும் கலக்கல் ரகம் தான்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி மேடம்..

   Delete
 2. செய்து பார்க்க சொல்லுவோம்... திருப்பிப் பார்க்க வைக்கிறதா என்று...!

  குறிப்பிற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சார்..

   Delete
 3. ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும் கலர் கலரா படம் பார்த்ததும் புதுசா தான் தெரியுது. நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி சசி.

   Delete
 4. திரும்பிப்பார்க்க வைக்கும் அருமையான ருசியான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா..

   Delete
 5. பொரியலுக்கு பேரை வித்யாசமா வைச்சே "திரும்பிப் பார்"க்க வைச்சுட்டீங்க! :)

  நானும் இப்படி கதம்ப பொரியல் செய்வதுண்டு..நல்லா இருக்குங்க ரெசிப்பி!

  ReplyDelete
  Replies
  1. ஓ.... கதம்ப பொரியல் கரெக்ட்டான பெயர்..நானும் மகியை திரும்பி பார்க்க வச்சிட்டேன்ல...கருத்திற்கு நன்றி மகி.:)

   Delete
 6. இந்தப் பெயருக்காகவே ருசித்துப் பார்க்க வேண்டும். ;)

  ReplyDelete
 7. திருப்பி சுவைக்க வைக்கும் பொரியல்..செய்து பாருங்கள் இமா..

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)