சாது மிரண்டால்!!!

7 comments
சொர்ணம்மா காய்ந்த சருகாக கட்டிலில் இடுப்பு ஒடிந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக தனக்கு தானே எதுவும் செய்து கொள்ள முடியாத நிலையில் வேதனையில் முனங்கி கொண்டிருந்தாள். பேரில் உள்ள சொர்ணத்தை உடல் முழுதும் அணிந்து கொண்டு மனதை மட்டும் இரும்பாக வைத்து கொண்டு கணவன்,குழந்தைகள் ஏன் அந்த ஊரையே இள வயதில் ஆட்டி வைத்து ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி கொண்டிருந்தவள்.அவளின் கணவன் விட்டு சென்ற சொத்துகளை அனுபவித்து கொண்டு கடன்களை மகன் தலையில் கட்டி தனியாக கிராமத்திற்கு போய் விட்டாள். 6 மாதங்களுக்கு முன் கிராமத்தில் 80 வயதிலும் தன வேலைகளை தானே செய்து கொண்டு இருந்தவளுக்கு ஒரு மாலை பொழுது தலை சுற்றல் வந்து கீழே விழுந்தவள்தான்.. இடுப்பு எலும்பு முறிந்து அடுத்தவர் தயவில்லாமல் காலத்தை தள்ள முடியாமல் மகனின் வீட்டில் தஞ்சம் புகுந்தாள். காலையில் எழுந்த உடன் காபி குடித்து அடுத்த கணமே வெற்றிலை போட்டு பழகி போன வாய் நம நமப்பு எடுக்க ஆரம்பித்தது. அவளின் மருமகள் பொன்னரசி தனியார் பள்ளியில் ஆசிரியையாக சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்தாள். காலையில் 5 மணிக்கு எழுந்து பம்பரமாக சுழன்று அனைத்து வேலைகளையும் முடித்து சொர்ணம்மா கிழவிக்கு தேவையான உதவிகளை செய்து பணிக்கு செல்ல நேரம் சரியாக இருக்கும். மற்ற நேரங்களில் கிழவியின் தேவைகளை செய்ய அவளின் மகனும் பேரன்களும் இருந்தார்கள். காலை கடன்களை முடித்து காபி பருக மருமகளை அழைத்து பார்த்தாள். அன்று காலையில் இருந்தே தலைவலியுடன் பொன்னரசி அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள்.

கிழவியின் தேவைகள் அனைத்தையும் முதலில் தினமும் செய்துவிடும் பொன்னரசி அன்று தலைவலி காரணமாக கொஞ்சம் சுணங்கி போனாள். தினமும் பழகி போன வாய் நம நமப்பு எடுக்க வெற்றிலைகாக மருமகளை அழைத்தாள். அழைப்புக்கு மருமகள் வராததால் கிழவியின் ரத்தம் சூடேற வாயில் இருந்து அனலான வார்த்தைகள் மருமகளின் மேல் எரிமலையாக விழுந்தது.

தினமும் யந்திரமாக வாழ்க்கையை ஓட்டும் பொன்னரசி அன்று கோபத்தில் கணவனிடம் ஏங்க.. கல்யாணமான புதிதில் கடனை என்தலையில் கட்டி என் வாழ்க்கையே யந்திரத்தனமா போச்சு.. கடன் யாரால வந்தது.. உங்க அக்காகளுக்கு செஞ்சு செஞ்சுதானே.. நா இந்த வீட்டுக்கு வந்தப்ப உங்க அம்மா என்ன சொன்னாங்க....! ஞாபகம் இருக்கா.. சொத்து எதுவும் தராம, கடன் எதுவும் தராம இருந்திருந்தா கூட எனக்கு நிம்மதி இருந்திருக்கும்... சொத்தை முழுவதும் அவங்க பேரில் வைத்து வெறும் கடனை மட்டும் உங்களுக்கு கொடுத்து சொற்ப வருமானம் வர்ற தொழிலை செய்றதா.. கடனை கட்டுறதானு கேட்டப்ப உங்க வெகுளித்தனத்தால என்கிட்ட உங்கம்மா சொன்னது "மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்" அதெல்லாம் ரெண்டு வருஷத்தில நல்லா வந்திடுவான்..
அதெப்பிடி.. அதெப்பிடி... மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவானாம்... அப்போ இங்க எதுக்கு வந்து ஏ உசிர வாங்குறாங்க.. எனக்கு தண்ணிய ஊத்துற ஆண்டவன் அவங்களுக்கு ஊத்த மாட்டானா.. ஸ்டேட் பஸ்ட்டா வந்த என்பையன் படிக்க இவங்க கிட்ட பண வசதி கேட்டப்ப பேரன்னு பாக்காம அப்பவும் மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் என்கிட்டே என்ன வசதி இருக்குனு சொன்னவங்கதான இவங்க. சொந்த வீடு, சொத்துன்னு இருக்கிறவங்க என்கிட்டே என்ன இருக்குனு சொல்றப்ப... அது எதுவுமே இல்லாத என்கிட்டே என்ன வசதி இருக்குனு இங்க இருக்காங்க. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு நீங்களும் உங்க அம்மாகிட்ட சொல்லுங்க.. பாசம்,மனித நேயம் தெரியாத ஆளுங்களுக்கு என்னால எதுவும் பண்ண முடியாது. குறையில்லாம எவ்வளவு செய்தாலும் பாருங்க என்னமா.. சத்தம் போடுறாங்கன்னு.. நானும் மனுஷிதானே, தலைவலி, கால்வலின்னு எனக்கும் வராதா என்று படபடவென்று பட்டாசு மாதிரி பொரிந்து விட்டாள்.

ஏதோ மருமகள் திட்டுவது தெரிந்து பேரனிடம் உங்க அம்மா என்னடா சொல்றா.. என்று 10 வயது பேரனிடம் கேட்க அவன் ம்ம்ம்.. அம்மாக்கு தலை வலிக்குதாம்.. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு உங்ககிட்ட சொல்லணும் சொன்னாங்க. அப்பிடின்னா என்ன பாட்டி..? என்று கேட்க சொர்ணம்மா தேள் கொட்டிய திருடன் போல் முழித்தாள்.

மறுநாள் மகனை அழைத்து தன் பெயரில் உள்ள சொத்துக்களை மகனின் பெயருக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய கூறினாள். சிறு வயது முதல் தன் அம்மாவின் அதிகார தோரனையை பார்த்து பழகிய மாதவனுக்கு அப்பொழுது அவள் குரலில் அதிகாரம் இல்லாத ஆணவம் இல்லாத பேச்சை உணர்ந்து ஆச்சரியப்பட்டான்.

7 comments:

  1. அப்பாடா... பாட்டிக்கு ஞானோதயம் வந்ததே...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி சகோ..

      Delete
  2. ஆஹா, அந்த மாமியார் கடைசியிலே மனம் மாறிட்டாங்களா!
    சந்தோஷ்ம்.

    மாமியார் கொடுமை தாங்காத இன்னொரு மருமகள் என்ன செய்தாள் தெரியுமா?

    இதைப்படியுங்கோ..... குட்டியூண்டு கதை தான்.

    http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html
    சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. அண்ணா.. காலையில் 9 to 6 இங்கு shutdown ..அதனால் பதிவிற்கு மிக தாமதம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  3. //அண்ணா.. காலையில் 9 to 6 இங்கு shutdown ..அதனால் பதிவிற்கு மிக தாமதம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.//

    ரொம்பவும் சந்தோஷம்மா .. எல்லாவற்றிற்குமே.

    இருப்பினும் நான் சொன்ன ஒன்று ரொம்ப நாட்களாக
    PENDING போட்டுள்ளீர்கள். OK அதனால் பரவாயில்லை.

    [வெந்நீர் இப்போ நல்லாவே ஆறிப்போச்சு. ஆறின கஞ்சி பழம்கஞ்சின்னு சொல்லுவாங்கோ! ; )))))) ]

    அன்புடன்
    VGK அண்ணா

    ReplyDelete
  4. கதை நல்ல சுறுக்குன்னு இருக்கு.அருமை.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி ஆசியா..

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)