தேவையான பொருட்கள் :-
- மைதா மாவு - அரை கிலோ
- சோடா உப்பு - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- பொட்டுகடலை - 200 கிராம்
- சர்க்கரை - 200 கிராம்
- வறுத்த வெள்ளை எள் - 50 கிராம்
- ஏலக்காய் - 4
செய்முறை :-
- சிறிது நீரில் உப்பையும் சோடா உப்பையும் கலந்து மைதாவில் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
- மிக்சியில் பொட்டு கடலையை போட்டு மாவாக திரித்து வைக்க வேண்டும்.
- பொட்டு கடலை மாவுடன் சர்க்கரை,வறுத்த எள்,பொடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் வட்டமாக தேய்த்த மாவை போட்டு பூரிகளாக சுட்டு எடுக்க வேண்டும்.
- பூரி சூடாக இருக்கும் போதே அதன் நடுவில் பொட்டுகடலை மாவு கலவையை பரவலாக வைத்து சுருட்டி வைக்க வேண்டும்.
- சுருள் போளி தயார்.
ஒரு பக்கம் மட்டும் சுட்டு எடுக்க வேண்டுமா...? - இது துணைவியாரின் சந்தேகம்...
ReplyDeleteபல முறை பூரி சாப்பிட்டதால் எனக்கும் தகவல் வேண்டும்... ஹிஹி...
நன்றி...
இரு புறமும் சுட்டு எடுக்க வேண்டும். ஆனால் முறுகலாக இல்லாமல் எடுக்க வேண்டும்.வருகைக்கு மிக்க நன்றி சார்..:)
ReplyDeleteபார்க்கும் போதே சுவையாக இருப்பது போன்ற உணர்வு தீபாவளி சிறப்பாங்க.
ReplyDeleteஇல்லை சசி..இத்தனை நாளா இது பப்ளிஷ் பண்ணாம draftல இருந்தது.. இன்று பார்த்து பப்ளிஷ் பண்ணேன்..:) லேப்டாப் கையில கிடைக்கும் போது செய்றதுதான்..வருகைக்கு நன்றி சசி..
ReplyDeleteபிடித்திருக்கிறது ராதா. சந்தர்ப்பம் அமையும்போது நிச்சயம் முயற்சித்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteசெய்து பாருங்கள் இமா.. வருகைக்கு நன்றி:)
ReplyDeleteபடத்தில் பார்க்கவும், செய்முறையினைப் படிக்கவுமே நாக்கில் ஜலம் ஊறுகிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். VGK
ReplyDeleteவருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி அண்ணா..:)
Delete