தேவையான பொருட்கள் :-
- உருளை கிழங்கு - இரண்டு
- பிரட் - 12 ஸ்லைஸ்
- பூண்டு - நான்கு
- மல்லி தழை - சிறிது
- மிளகு பொடி - சிறிது
- உப்பு - அரை ஸ்பூன்
- வெள்ளை எள் - ஒரு ஸ்பூன்
- தக்காளி சாஸ் - சிறிது
செய்முறை :-
- உருளை கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து அதனுடன் மிளகு பொடி, பொடியாக நறுக்கிய பூண்டு, மல்லி தழை, உப்பு இவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து வைக்க வேண்டும்.
- பிரட்டை முக்கோணமாக வெட்டி ஒவ்வொரு ஸ்லைஸின் மீதும் சாஸை தடவி விட வேண்டும்.
- அடுத்த லேயராக கிழங்கு கலவையை தடவி விட்டு அதன் மேல் வெள்ளை எள்ளை தூவி விட்டு மற்றொருமுக்கோண பிரட்டை அதன் மேல் வைத்து அனைத்து பிரட்டையும் ரெடியாக வைக்க வேண்டும்.
- அடுப்பில் தவாவை வைத்து சிறிது வெண்ணை அல்லது நெய்யை தடவி தவா கொள்ளும் அளவு பிரட்டை வைத்து பொன்னிறமாக மாறிய உடன் திருப்பி போட்டு மறுபுறமும் பொன்னிறமான உடன் எடுத்து விட வேண்டும்.
- காலை சிற்றுண்டியாக பரிமாறலாம்.
எல்லோருக்கும் பிடித்த ஸாண்ட்விச் தான்! விளக்கப்படங்கள் அழகாக உள்ளன!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி மனோ மேடம்.
Deleteபடமும் செய்முறை விளக்கங்களும் அருமை.
ReplyDeleteபசியைக்கிளறுவதாகவும், நாக்கில் ஜலம் ஊற வைப்பதாகவும் உள்ளன. பாராட்டுக்கள். VGK
ஊக்கத்திற்கு நன்றி அண்ணா..
Deleteபிடித்த ஸாண்ட்விச் அருமை. படங்கள் அழகாக உள்ளன....
ReplyDeleteவீட்டில் எல்லா பொருளும் இருக்கு... செய்திடுவோம்... நன்றி...
ReplyDeleteசெய்து பாருங்கள் சார்.. வருகைக்கு மிக்க நன்றி..:)
Deleteஎள்ளெல்லாம் சேர்த்து... சூப்பர் ராதா.
ReplyDeleteநன்றி இமா...:)
Delete