vej- egg fry

5 comments
தேவையான பொருட்கள்:-
  • முட்டை                                          - 3
  • காரட்                                                - 1
  • அரைக்கீரை                                  - ஒரு கைபிடி
  • புதினா                                             - சிறிது
  • பூண்டு                                             - 2 இதழ்
  • மிளகு பொடி                                 - அரை ஸ்பூன்
  • பிரட்                                                 - 4 ஸ்லைஸ்
  • உப்பு                                                 - சிறிது

செய்முறை:-
  • அரைக்கீரை, புதினா இவைகளை நன்றாக தண்ணீர் விட்டு அலசி பொடியாக அரிந்து  வைக்க வேண்டும்.
  • காரட்டை நன்றாக கழுவி துருவி வைக்க வேண்டும்.
  • பூண்டை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
  • பிரட்டை பிய்த்துப் போட்டு மிக்சியில் உதிர்த்து கொள்ள வேண்டும்.
  • முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதனுடன் பிரட் தூள், காரட், புதினா, பூண்டு, கீரை, மிளகு பொடி, இவைகளை சேர்த்து சிறிது உப்புடன் நன்றாக கலந்து வைக்க வேண்டும்.
  • தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கி சிறிது எண்ணெய் தடவி முட்டை கலவையை ஒரு கரண்டி எடுத்து தவாவில் ஊற்றி சிறிது தடிமனாக தேய்த்து கலர் மாறும் வரை வேக விட வேண்டும்.
  • கலர் மாறியதும் மறுபுறம் திருப்பி விட்டு வெந்த உடன் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறலாம்.
  • மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.     

5 comments:

  1. வித்தியாசமாக இருக்கு...

    இது போல் செய்ததில்லை...

    குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  2. வாவ் ! கேரட் கீரை முட்டை சேர்த்து ரொம்ப சுவையாக இருக்கு..

    ReplyDelete
  3. சத்துள்ள அதே சமயம் சுவையான சமையல்பா.... குழந்தைகளுக்கும் விருப்பமா இருக்கும். கேரட் சாப்பிட விரும்பாத என் பிள்ளைக்கும் இது நல்ல வழி. மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா...

    ReplyDelete
  4. முட்டையுடன் கீரையும் பிரெட்டும் சேர்த்து செய்வது வித்தியாசமான முயற்சி ராதா! ரொம்பவும் அருமை!!

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)