வெந்நீர் மகத்துவம்

14 comments
சமையல் தெரியாத சில பெண்களிடம் நல்லா சமைப்பியா எனக்கேட்டால் ஓ..வென்னீர் எல்லாம் சூப்பரா வைப்பேன் என நகைசுவையாக கூறுவார்கள்.ஆனால் அந்த வெந்நீரின் மகத்துவம் பலரும் அறிந்திருப்பார்களா..
வெந்நீரின் மகத்துவம்:-
 • வெந்நீர் தினமும் பருகினால் ரத்த ஓட்டம் சீராகும்.கொழுப்பின் அளவு குறையும்.
 • சளி,ஈஸினோபீலியா தொந்தரவு உள்ளவர்கள் தினம் வெந்நீர் பருகி வர நலம் காணுவார்கள்.
 • டான்சில்ஸ் உள்ளவர்கள் தவிர்க்க முடியாமல் ஐஸ் கிரீம்,குளிர்பானம் சாப்பிட்டால் சாப்பிட்ட உடனே வெந்நீரை குடித்தால் தொந்தரவு இருக்காது.
 • நகக்கண்களில் பூஞ்சை தொற்று இருந்தால் வெந்நீரில் படிகாரத்தை கரைத்து அதில் கைகளை 10நிமிடம் அமிழ்த்து வைத்து எடுக்க நோய் தீரும்.(சுமார் ஒரு வாரம் )
 • வெந்நீரில் தேனை கலந்து பருக உடல் பருமன் குறையும்.(1 டம்ளர் வெந்நீர் +1 ஸ்பூன் தேன் )
 • சிறந்த மலமிலக்கியாக வெந்நீர் செயல்படுகிறது. காலை எழுந்த உடன் 2 டம்ளர் வெந்நீர் பருகி சிறிது நடை பயின்றால் மலம் எளிதாக வெளியேறும்.
 • வெந்நீரில் சிறிது உப்பை போட்டு கரைத்து தொண்டையில் படுமாறு கவனமாக விழுங்கி விடாமல் gargle செய்தால் தொண்டைப்புண், தொற்று ,முதலியவை குணமாகும்.
 • கடின உழைப்பால் உடல் வலி எடுத்தவர்கள் வெந்நீரில் யூகலிப்டஸ் ஆயிலை சிறிது விட்டு குளித்தால் உடல் வலி தீரும்.
 • நன்றாக கொதித்த வெந்நீரில் சிறிது மஞ்சள் தூளை போட்டு வெளியேறும் நீராவியை இன்ஹேல் செய்தால் ஜலதோஷத்திற்கு நல்ல நிவாரணம்.
 • வெயிலில் அலைந்து விட்டு தாகத்திற்காக தண்ணீர் அருந்த குளிர் நீரை அருந்தாமல் சிறிது வெந்நீரை அருந்தினால் தாகம் தீரும்.குளிர் நீரை பருகினால் இதமாக இருக்கும்...ஆனால் தாகம் தீர்ந்த உடன் சிறிது நேரத்தில் ஜலதோஷம்,தலைவலிக்கு மருந்தை தேட  வேண்டி வரும் .
 • சுளுக்கு விழுந்த இடத்தில் நல்லெண்ணெய் தடவி நீவி விட்டு வெந்நீரினால் ஒற்றடம் கொடுத்து பின் வெந்நீரை கொண்டு சுளுக்கு விழுந்த இடத்தில் ஊற்றி கழுவ சுளுக்கு சரியாகும்.

14 comments:

 1. வெந்நீர் பற்றி சுடச்சுட ஓர் ப்திவு அருமை.

  நான் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக வெந்நீர் மட்டுமே அருந்தி வருகிறேன். தொண்டை இருமல் முதலிய தொந்தரவுகள் ஏதும் இல்லாமல் உள்ளது.

  நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.

  02 10 2012 வலைச்சரம் பார்த்தீர்களா? இல்லாவிட்டால் போய் பார்த்து ஒரு கருத்துக் கூறுங்களேன். இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/search?updated-max=2012-10-03T11:38:00%2B05:30&max-results=20&start=1&by-date=false

  அன்புடன்
  VGK

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அண்ணா..வலைசரம் பார்த்தேன் அண்ணா :)

   Delete
 2. இவ்வளவு இருக்கா... ?

  மிக்க நன்றிங்க...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தனபாலன் சார்.:)

   Delete
 3. அன்புத்தங்கை ராதா ராணி அவர்களே,

  என் ” ‘எலி’ஸபத் டவர்ஸ்’ ” இல் எலியைத்துரத்திப்பிடித்து வரும் ஸாரி படித்து வரும் நீங்கள் நல்ல நகைச்சுவை விரும்பியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  02 10 2012 அன்று வலைச்சரத்தில் என் மற்றொரு அன்புத்தஙகை மஞ்சு என்பவர் என்னைப்பற்றி எழுதியுள்ளார்கள். அதைப்போய் படியுங்கள்.

  அங்கு உடனே மறக்காமல் ஒரு கருத்து அளியுங்கள்.

  அதில் பல்வேறு சிரிப்புக் கதைகளின் இணைப்புக்ள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு அவை மிகவும் பயன்படக்கூடும்.

  இதோ வலைச்சரத்தின் இணைப்பு:

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

  அன்புடன்
  கோபு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. அண்ணா ..படித்தேன்.வேலை காரணமாக தாமதமாகிவிட்டது.:)

   Delete
 4. மிக்க நன்றி, நானும் தங்களின் பின்னூட்டத்தை, வலைச்சரத்தில் கண்டு மகிழ்ந்தேன். அதில் உள்ள பல்வேறு இணைப்புகள் உங்களுக்கு மிகவும் பயன்படக்கூடும்.
  குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

  தாங்கள் ஏதாவது புது வெளியீடுகள் கொடுக்கும் போது எனக்கு மறக்காமல் ஓர் மெயில் தகவல் LINK உடன் அனுப்பவும். அப்போது தான் என்னால் உடனே வந்து கருத்துக்கூற முடியும். என் e-mail ID valambal@gmail.com

  நான் தினமும் மெயில் Inbox check-up செய்வேன்.
  Dash Board பக்கம் போவது இல்லை. இது தங்கள் தகவலுக்காக மட்டும்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  ReplyDelete
 6. கரண்ட் கட்டினால் லேப் டாப் பக்கமே போகவில்லை.வலைச்சரம் பார்த்து விட்டேன் சார் .. தகவலுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 7. வெந்நீரின் மகத்துவம் பகிர்வு அருமை.நல்ல பகிர்வு..

  Participate in My First Event - Feast of Sacrifice Event
  http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html

  ReplyDelete
 8. அன்புள்ள மேடம், தங்களை ஏதாவது ஒரு வாரம் [திங்கள் முதல் ஞாயிறு வரை] வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க, பரிந்துரை செய்யலாமா என் நினைக்கிறேன். தங்களுக்கும் இதில் விருப்பம் இருந்தால் எனக்கு மெயில் மூலம் தெரிவிக்கவும்.

  என் மெயில் ID : valambal@gmail.com

  ReplyDelete
 9. வெந்நீர் பற்றி சுடச்சுட ஓர் பதிவு அருமை............அருமை.........

  ReplyDelete
 10. Dear Sister,

  I would like to share some happy news to you which may be very useful for your writing in Blog. Please get in touch with me through e-mail: valambal@gmail.com

  Affectionately yours,
  VGK

  ReplyDelete
 11. வெந்நீர் பற்றி பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)