தேவையான பொருட்கள் :-
- தண்டு கீரை - அரை கட்டு
- சின்ன வெங்காயம் - 10
- தக்காளி - 2
- கடலை பருப்பு - அரை கப்
- சோம்பு - 1 ஸ்பூன்
- உப்பு - சிறிது
- கரம் மசால் பொடி - 2 ஸ்பூன்
- மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் (காரத்திற்கு தேவையான அளவு )
- பச்சை மிளகாய் - 2
- அரைக்க :-
- கீரை - சிறிது
- பூண்டு - 4
- இஞ்சி - சிறிது
- தேங்காய் - சிறிது
செய்முறை :-
- கடலை பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து நன்றாக பிழிந்து மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
- கீரையில் பாதியை பொடியாக நறுக்கி அரைத்த கலவையுடன் சேர்த்து நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்க வேண்டும்.
- மீதி கீரையை வதக்கி வைக்க வேண்டும்.
- வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பருப்புக்கலவையை சிறியதாக கிள்ளி போட்டு பொன்னிறம் வந்த உடன் எண்ணெய் வடித்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
- மிக்சியில் தேங்காய், இஞ்சி, பூண்டு, சேர்த்து முதலில் அரைத்து விட்டு அதன் பின் வதக்கிய தண்டு கீரையை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு வெடித்த உடன் வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கி அதனுடன் கரம் மசாலா, மிளகாய் பொடி சேர்த்து பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- கொதிக்கும் கலவையில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து நன்றாக கிளறி சிறிது உப்பை சேர்த்து கலந்து கொதிக்கும் போது செய்து வைத்திருக்கும் பருப்பு உருண்டையை அதில் சேர்த்து உப்பு சரி பார்த்து இறக்கி விட வேண்டும்.
- கீரீன் குழம்பு தயார்.
புது வகையான குழம்பு...
ReplyDeleteநன்றி...
வருகைக்கு நன்றி சகோ..
Deleteம்.. வித்தியாசமாகத்தான் இருக்கு.
ReplyDelete:)
Deleteபடங்களும், விளக்கங்களும், பகிர்வும் மிகவும் ருசிகரமாக உள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteவருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அண்ணா..
Deleteபுது மாதிரி குழம்பா இருக்கே... !!
ReplyDeleteபுதுசாக இருக்கு.
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
ReplyDeleteவலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.பகிர்வுக்கு நன்றி.