குல்கந்து

9 comments
தேவையான பொருட்கள்:-
 • காய்ந்த ரோஜா இதழ்கள்                       - 50 கிராம்
 • நெய்                                                               -50 கிராம்
 • கல்கண்டு                                                   - 50 கிராம்
 • தேன்                                                            - 100கிராம்

செய்முறை :-

 • ரோஜா இதழ்களை சிறிது வெந்நீர் விட்டு  ஊற வைத்து 2 நிமிடங்களுக்கு பின் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவேண்டும்.

 • வாணலியில் நெய்யை விட்டு அடுப்பில் வைத்து சூடு பண்ண வேண்டும்.

 • சூடான நெய்யில் ரோஜா இதழ்களை போட்டு நன்கு வதக்க வேண்டும் (அடுப்பை குறைவாக எரிய விட்டு வதக்கவும்) 
 • நன்றாக ஆறியதும் தேனை முதலில் சேர்த்து நன்கு கிளறி விட்டு பின் கல்கண்டை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். 
 • இதை உடனே பயன் படுத்த முடியாது.
 • ஒரு வாரத்திற்கு பின் நன்கு ஊறிய உடன் பயன் படுத்தலாம். 
 • ஊற, ஊற ருசியும் அதிகமாகும்.
 • தினம் ஒரு ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் சாப்பிட ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் உண்டு.
 • ரத்த சோகைக்கும் நல்ல மருந்து.
 • ஊறுகாய் போல் ஊறினால் இதன் மருத்துவ குணம் அதிகரிக்கும். 
 • ஆரம்ப நிலை சீதபேதிக்கு நல்ல மருந்து.

9 comments:

 1. எங்க ஊர்ல நாட்டு மருந்து கடையில் அம்மா பயன்படுத்தியது மறுபடி உங்க பதிவில் தான் பார்க்கிறேன் அதுவும் தயாரிக்கும் விதமே.

  ReplyDelete
 2. ம்ம்ம்... சூப்பருங்க சகோ

  ReplyDelete
 3. ரொம்ப நன்றிங்க... செய்து பார்ப்போம்...

  ReplyDelete
 4. நல்ல பயனுள்ள பதிவு அருமை அக்கா.....

  ReplyDelete
 5. அருமையான மருத்துவக் குறிப்போடு கலந்த சமையல்
  குறிப்பு !...அவசியம் செய்து பயன்படுத்த வேண்டும் போல்
  உள்ளது .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

  ReplyDelete
 6. எல்லாமே காஸ்ட்லி ஐய்ட்டமா இருக்கே அக்கா.. நிறைய செலவாகும் போல இருக்கே?

  ReplyDelete
 7. நறுமணம் கமழும் நல்லதொரு பதிவு, செய்முறை விளக்கங்களும் படங்களும் அருமை. பாராட்டுக்கள்.

  கீழே உள்ள இணைப்புக்குச் சென்று, தங்கள் கருத்தினைப் பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

  அன்புடன் VGK

  ReplyDelete
 8. செம ஈசியா இருக்கு... செய்து பாக்குறேன்

  ReplyDelete
 9. ராதா வீட்டிலேயே குல்கந்து செய்து அசத்திட்டீங்க.பகிர்வுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)