பண்டை காலத்தில் இருந்தே திருச்சுழி ஒரு முக்கியமான புண்ணிய யாத்திரை தலமாகும்.திருச்சுழி ஒரு சிறிய கிராமம். மதுரையில் இருந்து 38 மைல் தொலைவில் உள்ளது. இவ் ஊரில் ஸ்ரீ பூமி நாதராக சிவ பெருமான் அருள் புரியும் கோயிலானது, பழமைக்கு பெயர் பெற்றதாய் பெரு மதிப்புடன் விளங்குகிறது. 3000 வருட பழமையுடன் விளங்கும் இக் கோயிலில் சகாய வல்லி என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானின் துணைவியாருக்கு தனி சந்நிதி உண்டு. இவ்விரண்டு தெய்வங்களுக்கும் உண்டான தமிழ்த்திருப்பெயர்கள் திருமேனிநாதர், துணைமாலையம்மன் என்பனவாகும்.
பாடல் பெற்ற இத்தலத்தில் பக்தியில் சிறந்து விளங்கிய தமிழ் அருட் தொண்டர்களாகிய அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் வாகீசர் ஆகியோர் இக்கோயிலுக்கு வருகை புரிந்திருக்கின்றனர். இறைவன் இறைவி, இருவர் மீதும் அற்புதமான அழியாப் புகழுடைய தமிழ்ப்பாடல்களை அவர்கள் இக் கோயிலில் இயற்றி அருளினார்கள்.
இக்கோயில் அமைந்த ஊருக்கு பெயர்க்காரணமும் உண்டு. பராந்தக சோழன் ஆட்சி செய்த காலத்தில் ஒருமுறை வெள்ளம் வந்து நாடு முழுவதும் முழ்கும் அபாயம் வந்ததால் சோழன் இறைவனை நினைத்து வழிபட இறைவன் தன் திரிசூலத்தை கொண்டு ஒரே ஒரு முறை தாக்கத்தால் உருவான புனிதமான குளத்தில் நாட்டை சூழ்ந்த வெள்ளம் இறைவன் கருணையினால் உருவான குளத்தில் ஒரு சுழி போல் தண்ணீர் முழுவதும் வடிந்து நாடு காப்பாற்றப் பட்டதால் அவ்விடம் திருசுழியல் என்று பெயர் பெற்று காலப்போக்கில் திருச்சுழி என்று மருவிவிட்டது.இக்குளம் திரிசூழ தீர்த்தம் என்ற பெயருடன் விளங்குகிறது. இறைவனின் திரு விளையாடல் மாசி மாதம் பௌர்ணமிக்கு ஒருநாள் முன்னர் நடந்ததால் இன்றும் இக்குளத்தில் மாசி மாத பௌர்ணமிக்கு ஒரு நாள் முன்னர் குளத்தில் நீர் மட்டம் கணிசமான அளவு உயர்வது வழக்கம்.இப் புனித ஊரில் பிறந்த பகவான் ரமணர் இக் குளத்தின் சிறப்பை பற்றி கூறி இருக்கிறார். வருடத்தின் மற்ற நாட்களில் தண்ணீர் அவ்வளவு நன்றாக இருக்காது. மாசி மாதத்தில் மக நட்சத்திர தினத்தன்று தண்ணீர் பெருகி நீர் மட்டம் உயரும். சுவாமியின் அபிஷேகத்திருவிழா அன்றுதான் அதாவது பிரம்மோற்சவத்தின் 10ம் நாள் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு திரி சூழதீர்த்தத்தின் நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் முடிந்த பின் மக்கள் அனைவரும் அக்குளத்தில் நீராடுவர் என்று நினைவு கூறுகிறார்.
ரமணர் பிறந்த அறை |
ரமணரின் பெற்றோர் |
ரமணர் |
தியான மண்டபம் |
இவ் ஊரில் ரமணர் அவதரித்த இல்லம் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது. இந்த இல்லம் ஸ்ரீ ரமணாஸ்ரமத்தால் பெறப்பட்டு இன்று சுந்தர மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. ரமணருக்கென்று விஷேச பூஜை ஒவ்வொரு நாளும் அவர் பிறந்த அறையில் நடை பெறுகிறது.
மதுரையிலிருந்துன்னு போட்டதும் எனக்கு கன்பியூஸ் ஆகிப்போச்சு அக்கா!
ReplyDeleteAruppukottai - Tiruchuli - Narikudi - Parthibanoor road route சரிதானே அக்கா?
ரமணர் பத்தி எழுதாம இருந்திருந்தா எனக்கு எந்த திருச்சுழின்னு பிடிகிடைச்சிருக்காது!
என் சித்தி வீடு மானாமதுரைல தான் இருக்கு....லாஸ்ட் டைம் வேகேசன்ல வந்திருந்தப்போ எங்க சித்தி வீட்டுக்கு பைக்குல போனேன்.. திருச்சுழி வழியாத்தான் போனேன்... ஆனாலும் இந்த கோவிலுக்குள்ளே போனதில்லை! அடுத்த முறை கண்டிப்பா கோவிலுக்குள்ளே போய் சுவாமி தரிசனம் செய்யனும்!
நம்ம ஊர் பக்கம் இருந்திட்டு இதுவரை இந்த கோவிலை தரிசனம் பண்ணியது இல்லையா தம்பி...இந்த முறை வரும்போது தரிசனம் பண்ணுங்க..ராமேஸ்வரம் கோவில் மாதிரி இந்த கோவிலும் இருக்கும்..கருவறை சுவாமியை போட்டோ எடுக்க அனுமதி மறுக்கப் பட்டதால் எடுக்கவில்லை..ரோடு ரூட் சரிதான்.:)
Deleteகோயிலுக்கு சென்றதுண்டு... அடுத்த முறை ரமணர் அவதரித்த இல்லத்திற்கு செல்ல வேண்டும்...
ReplyDeleteவருகைக்கு மிக்க மகிழ்ச்சி சகோ.ரமணர் இல்லத்தை அவசியம் பாருங்கள்..பக்கத்து ஊர்தான் எங்கள் வீடு.வரும்போது எங்கள் வீட்டிற்கும் வாருங்கள் சகோ.:)
Deleteஅழகான படங்களுடன் கூடிய அற்புதமான படைப்பு.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா.:)
Deleteதியான மண்டபம் மனதில் அமைதியை தருகிறது பார்க்காமலேயே.
ReplyDeleteகருத்திற்கு நன்றி சகோ..
ReplyDeleteஅழகான படங்களுடன் கூடிய படைப்பு அருமை அக்கா...
ReplyDeleteவருகைக்கு நன்றி விஜி..
ReplyDeleteஅருமையான ஆக்கம் .மனம் கவர்ந்த பதிவு .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .
ReplyDeleteமேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்
என் வலையை தொடர்வதற்கும் , முதல் கருத்தை பகிர்ந்ததர்க்கும் மிக்க நன்றி தோழி..:)
ReplyDelete