தேவையான பொருட்கள்:-
- ரைஸ் நூடுல் -1 பாக்கெட்
- முட்டைகோஸ் - சிறிது
- காரட் - 1
- குடை மிளகாய் - 1
- சோயா சாஸ் - 2 ஸ்பூன்
- சில்லி சாஸ் - 2 ஸ்பூன்
- பல்லாரி வெங்காயம் - 1
- இஞ்சி ,பூண்டு பேஸ்ட் - சிறிது
- சீனி - 2 ஸ்பூன்
- ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
- ஃ ப்ரை பண்ண தேவையான ஆயில் - சிறிது
செய்முறை:-
- முதலில் முட்டைகோஸ், காரட், குடை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக கட் பண்ணி கொள்ள வேண்டும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக்கொண்டு அதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ் கலந்து இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுடன் ஆலிவ் ஆயிலையும் சேர்த்து இறுதியில் சீனியையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
- இதை தனியாக பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
- சுமார் 4 மணி நேரம் கழித்து இந்த கலவை நீர் விட்டிருக்கும்.
- அடுப்பில் வாணலியை வைத்து வேண்டிய ஆயிலை ஊற்றி சூடான உடன் நூடுல்லை உடைக்காமல் அப்படியே முழுதாக போட்டு கோல்டன் கலர் வந்த உடன் ஆயிலை வடித்து மொறு மொறுப்பான நூடுல்லை தனியே எடுக்க வேண்டும்.
- சாப்பிட பரிமாறுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் பரிமாறும் பவுலில் சிறிது நூடுல்லை வைத்து அதில் பொடியாக நறுக்கிய அனைத்து காய்களையும் சிறிது வைத்து அதன் மேல் வெங்காயம், சோயா, சில்லி சாஸ் கலவையை சேர்த்து நன்றாக பிரட்டி விட்டு பரிமாற எடுத்து வைக்க வேண்டும்.
- இதில் காய்களை அப்படியே வேக வைக்காமல் சேர்ப்பதால் சத்துக்கள் வீணாகாமல் ஆரோக்கியமான உணவாக சாப்பிடலாம்.
எங்காவது சுற்றிவிட்டு மாலை ஆறுமணி வாக்கில் வீட்டிற்கு திரும்பி பசிக்கிறது என்று சொன்னால்... இது போன்று எதையாவது எனக்கு செய்து தருவார் என் தங்கை, இன்று கடல் கடந்து வசிக்கும் எனக்கு..இந்த பதிவு அவரை நினைவுகூறச்செய்கிறது!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி தம்பி..
Deleteகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... விளக்கமும் படங்களும் அருமை... நன்றி...
ReplyDeleteகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சகோ..வருகைக்கு மிக்க நன்றி..
Deleteநல்லாயிருக்கு ராதா.முயற்சிக்க வேண்டும்.
ReplyDeleteசெய்து பாருங்கள் ஆசியா..சிறிது ஊறிய உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.வருகைக்கு நன்றி.
Deleteவித்தியாசமாக இருக்கு ராதாராணி.
ReplyDeleteகாய்கறிகளை வேக விடாமல் செய்யும் பாணி சற்று புதுமையாக இருக்கிறது! நல்லதொரு குறிப்புக்கு நன்றி!!
ReplyDeleteகுழந்தைகள் மிகவும் விரும்பிச்சாப்பிடும் அருமையான சுவையான நூடுல்ஸ் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteஇன்றே இதை அவசியம் செய்து சாப்பிடுவோம் .படங்களும் விளக்கமும்
ReplyDeleteமிக அருமையாக உள்ளது தோழி .மிக்க நன்றி பகிர்வுக்கு .மேலும் தொடர
வாழ்த்துக்கள் .