தேவையான பொருட்கள்:-
- சேப்பங்கிழங்கு - அரை கிலோ
- சோம்பு - 1 ஸ்பூன்
- மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி - சிறிது
- இஞ்சி - சிறிது
- பூண்டு - 5 இதழ்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் - சிறிது
- எண்ணெய் - 200 மில்லி
செய்முறை:-
- சேப்பங்கிழங்கை நீரில் நன்றாக கழுவி கழுவிய கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக விட வேண்டும்.
- தோல் உரிக்கும் பதத்தில் வேக வைக்க வேண்டும்.
- தோல் உரித்த கிழங்கை நீளமாக கட் பண்ண வேண்டும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடான உடன் நறுக்கிய கிழங்கை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
- மிக்சியில் தேங்காய்,இஞ்சி,பூண்டு ,சோம்பு போட்டு அரைக்க வேண்டும்.
- வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான உடன் மிளகாய் பொடி,மஞ்சள் பொடி போட்டு அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் உடன் உப்பையும் போட்டு சுண்டும் வரை வதக்க வேண்டும்.
- வதங்கிய கலவையில் பொன்னிறமாக வறுத்த கிழங்கை போட்டு நன்றாக பிரட்டி விட்டு கலவை நன்கு சேர்ந்த உடன் இறக்கி வைக்க வேண்டும்.
- சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.
- அனைத்து வகை சாதத்திற்கும் இது பொருத்தமானது .
இப்பமே சாப்பிடனும் போல இருக்கு சகோ
ReplyDeleteகருத்திற்கு நன்றி சகோ..
Deleteபடத்துடன் எளிதான குறிப்பிற்கு நன்றி...
ReplyDeleteகருத்திற்கு நன்றி சகோ..
Deleteஅக்கா...சேப்பங்கிழங்கை நம் ஊர்பக்கம் சேனைகிழங்கு என்று தானே கூறுவார்கள்?
ReplyDeleteசேனைகிழங்கு அளவில் பெரிதாக இருக்கும் .ஒருகிழங்கு 4 ,5 கிலோ வரை பெரிதாக இருக்கும்.சேம்பு அளவில் சிறியது.கருணை கிழங்கை விட சிறியது..வருகைக்கு நன்றி தம்பி..
Deleteஓ...விளக்கத்திற்கு நன்றி அக்கா!
Deleteஇந்த வறுவல் புதுவிதமாய் இருக்கிறது ராதா! பொதுவாய் வேக வைத்த சேப்பங்கிழங்கை மசாலா பிரட்டி எண்னெயில் போட்டு வறுப்பார்கள். இதில் எண்ணெயில் வறுத்த பிறகு மசாலா சேர்ப்பது நன்றாக இருக்கிறது!
ReplyDeleteவறுத்து சேர்ப்பதால் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும் மேடம்..வருகைக்கு மிக்க நன்றி மேடம்.
Deleteஅருமை படங்களுடன் சமையல் விளக்கிய விதம் நன்றாக இருந்தது நன்றி எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லுங்க
ReplyDeleteஎன் வலையில் முதல் முறையாக கருத்து சொல்லி இருக்கீங்க..தொடர்வதும் மகிழ்ச்சி சகோ.
Deleteவருகைக்கு நன்றி மேடம் ..
ReplyDeleteசகோ இதெல்லாம் நல்லாவேயில்ல வெறும் படத்த மட்டும் காமிச்சிட்டு நீங்க சாப்பிடுவது ஒரு நாளாவது எனக்கு எடுத்துட்டு வந்து தந்திருக்கிங்களா ?
ReplyDeleteவந்தவாசி பொண்ணுக்கு கொடுக்காமலா....எடுத்துட்டு வாறன் சசி..))வருகைக்கு
Deleteமிக்க நன்றி சசி..
இந்த வறுவல் புதுவிதமாய் இருக்கிறது ராதா அக்கா...நன்றாக இருக்கிறது....
ReplyDeleteஅருமை.... அக்கா என்னால் வலைத்தலம் வரமுடியவில்லை இப்பொழுதுதான் எனக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தது. அக்கா நலம் காண ஆவல்.
நான் நலம் விஜி..நீங்க ரெம்ப பிசியாயிட்டீங்க போல..வருகைக்கு நன்றி விஜி..
Deleteசூப்பர் ,புதுவிதமாக செய்து இருக்கீங்க,வறுத்து விட்டு மசாலாவில் பிரட்டுவதால் சேப்பங்கிழங்கில் உள்ள வழுவழுப்பு தெரியாது இல்லையா? நல்ல பக்குவம்.
ReplyDeleteசரியா சொன்னீங்க ஆசியா..கருத்திற்கு மிக்க நன்றி..
Deleteசெய்து பார்க்கிறேன். வறுத்தபின்னர் மசாலவில் புரட்டுவதால் முறுகலாக இருக்குமா என்ன?
ReplyDeleteபடம் அப்படியே ஹார்லிக்ஸ் போல் சாப்பிடத்தூண்டுகிறது.
கண்டிப்பாக இருக்கும் சார்.ஏனென்றால் எண்ணெயில் வறுத்து விட்டு மசாலாவில் புரட்டும் போது மசாலா கெட்டியாக ஈர பதம் போகும் வரை வதக்கப்படுவதால் கிழங்கு மொறு மொறுப்பாகவே இருக்கும்.
ReplyDeleteநீங்கள் செய்தவைகளை பார்க்கும் போது அதில் எனக்கு உங்கள் நல்ல மனதும் சேர்ந்து தெரிகிறது சகோதரி.முதல் முறையா இப்ப தான் உங்கள் வலை தளம் வருகிறேன்.தொடரட்டும் உங்கள் சேவை
ReplyDelete