வெண் பூசணி ரெய்தா

8 comments
தேவையான பொருட்கள்:-
 • வெண் பூசணி                                       - 250கிராம்
 • மாதுளை முத்துக்கள்                       - 1 கப்
 • மிளகாய் வத்தல்                                - 2
 • கருவேப்பிலை                                   - 2ஆர்க்கு
 • கடுகு                                                        - 1ஸ்பூன்
 • தயிர்                                                         - 1கப்
 • உப்பு                                                         - சிறிது
 • எண்ணெய்                                            - 1ஸ்பூன்
செய்முறை:-
 • பூசணி காயை  தோல் சீவி நறுக்கி கொண்டு சிறிது நீர் விட்டு வேக வைத்து  எடுத்து  கொள்ளவேண்டும்.
 • மாதுளையை வேக வைத்த பூசணியோடு  சேர்த்து உப்பு  போட்டு  கலந்து வைக்க வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து போட்டு வெடித்த உடன்  மிளகாய் வத்தலை கிள்ளி போட்டு கருவேப்பிலை சேர்த்து பூசணி, மாதுளை கலந்த கலவையில் கொட்ட வேண்டும்.
 • இறுதியாக ஒரு கப் தயிரை அதனுடன் கலந்து நன்றாக பிரட்டி விட்டால் வெண் பூசணி ரெய்தா தயார்.
 • ரத்த சோகைக்கு இதை சாப்பிட்டால் மிகவும் பலன் தரும்.

8 comments:

 1. எங்க ஊர் ஸ்பெஷல்... நன்றி சகோ...

  ReplyDelete
  Replies
  1. இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் இது உங்கூர் ஸ்பெசல்ன்னு ...சந்தோஷமா இருக்கு சகோ..மிக்க நன்றி..)

   Delete
 2. ம்ம்ம்ம்...ரெடி பண்ணி வைங்க...ரெடி பண்ணி வைங்க.. தம்பி ஜனவரியில் ஊருக்கு வர்றேன்.. வந்தா கண்டிப்பா அக்கா வீட்டுக்கு வருவேன்! இதெல்லாம் தம்பிக்கு செஞ்சிகொடுக்கணும் ஆமா சொல்லிப்புட்டேன்! :)

  அருப்புக்கோட்டை - விளாத்திகுளம் ரோட்டுல பந்தல்குடி தாண்டி இருக்குற புதூர் தான் என் சொந்த ஊர், ப்ரொபைலில் குறிப்பிட்டிருக்கிறேன்..உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்! :)

  ReplyDelete
  Replies
  1. அட..நம்ம புதூர்..நிறைய உறவுகள் அந்த ஊர்தான் தம்பி.வாங்க..வாங்க..விருந்தே சாப்பிடலாம்..புதூர் ஆட்கள்தான் தற் சமயம் மாமாவிடம் வேலை செய்கின்றனர்.அவசியம் வாங்க தம்பி.சுப்புராஜ் திருமண மண்டபம் தெரியுமா..! மிக்க நன்றி தம்பி..)

   Delete
  2. புதூர் நான் பிறந்து வளர்ந்த ஊர் அக்கா.. தெரியாமையா? ரத்னா தியேட்டர் பக்கத்தில் இருக்கும் கல்யாண மண்டபம் தானே சுப்புராஜ் திருமண மண்டபம்...ரத்னா தியேட்டர் முன்னால இருந்தது..இப்போ மூடிட்டாங்க...ரத்னா தியேட்டர்ல தான் நாட்டாமை & சூர்யவம்சம் உள்ளிட்ட பிரபல படங்களை குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து பார்த்தது..சூர்யவம்சத்திற்கு பிறகு இப்போதுவரை எந்த படமும் நாங்கள் சேர்ந்து பார்த்ததில்லை!

   Delete
 3. அருமையான ருசியான புதுமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஊக்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா..:)

   Delete
 4. நல்ல ரெசிப்பி எளிதில் செய்ய கூடியது. கண்டிப்பா ஒரு தடவை செய்து பார்க்கனும்.

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)