ரங்கோலி

11 comments
ரங்கோலி போடும் பொழுது அதன் அழகை கூடுதலாக காட்டுவது கலர் பொடிதானுங்க.. கலர்பொடியை கடையில் இருந்து வாங்கினாலோ அல்லது வீட்டிலேயே கலர் பொடி தயார் செய்தாலோ அதை அப்படியே ரங்கோலியின் மேல் போடாமல் அதை நன்றாக சல்லடையில் சலித்து எடுத்தால் மிக நைசாக பொடிவரும் .  இந்த பொடியை கோலத்தின் மேல், ரங்கோலியின் மேல்போட்டால் போட்ட டிசைன் பெயிண்ட் செய்தது போல் அழகாக வரும்.டிஷைனுக்கு ஏற்றவாறு கலர் பொடியை சல்லடையை உபயோகித்தும் தூவலாம். வேலை சுலபத்தில் முடியும்.அவ்வாறு போட்ட ரங்கோலிதான் இது.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க..;)
11 comments:

 1. எல்லா ரங்கோலிக் கோலங்களுமே மிகவும் அழகாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. அடடே என்னவொரு ரம்யமான பெய்ண்டிங்.. கண்களை அள்ளுகிறது.

  # எப்பிடி புகழ்ந்தேன் பார்த்தீங்களா... சொன்ன பேமன்ட்டை கரக்டா அக்கௌன்ட்ல போட்டுறனும்! :-)

  ReplyDelete
  Replies
  1. வாசு... புதூர் வந்தாச்சா.. ரொம்ப நாளா காணலியே.. சுகமா தம்பி..
   //அடடே என்னவொரு ரம்யமான பெய்ண்டிங்.. கண்களை அள்ளுகிறது.// இந்த மூணுல ஒண்ணுதான் நான் போட்ட ரங்கோலி..:)மத்த ரெண்டும் பிரண்ட்ஸ் போட்டது.. அதனால பேமன்ட் மைனஸ் ல போயிட்டிருக்கு. வருகைக்கு நன்றி.

   Delete
 3. ஒவ்வொரு ரங்கோலியும் கச்சிதமாய் பேப்பரில் கட் பண்ணி ஒட்டியது போல இருக்குங்க. பாராட்டுக்கள்! :)

  ReplyDelete
 4. அனைத்து சித்திரங்களும் அழகு... பாராட்டுக்கள்...

  உதவி செய்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. பெயிண்ட் செய்தது போல் அழனன ரங்கோலி...பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. காம்பஸ் வைத்து வரைந்த மாதிரி அத்தனை பெர்ஃபெக்ட் ரங்கோலி.கலரிங்கும் சூப்பர் ராதா.

  ReplyDelete
 7. ரொம்பவும் அழகான கோலங்கள் ராதா! வண்ணச்சேர்க்கை பொருத்தமாக, கோலங்களுக்கு அதிக அழகு சேர்ப்பதாக உள்ளது. இனிய பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 8. ஏதாவது ஸ்கேல் உபயோகிதீர்களா என்ன ? எப்படி கச்சிதமாக இருக்கிறது ?

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)