உலர் பழ கேக் (Dry Fruit Cake)

9 comments
அத்திப்பழம் ரத்த விருத்திக்கு ஏற்ற பழம். ஆனா அதை அப்படியே சாப்பிடுவது அநேகருக்கு பிடிக்காது . ஆப்ரிகாட்டும் அத்தியின் மருத்துவ தன்மையை கொண்டதுதான்... இவை குடல் புழுக்களை அழிப்பதிலும் பித்தப்பை கற்களை போக்குவதிலும் இப் பழங்களின் பணி மகத்தானது.நரம்புகளை  வலுப்படுத்தும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளதால் ரத்த சோகையை   போக்கும்.எல்.டி .எல் என்னும் கெட்ட கொழுப்பை நீக்கும்.பேரீச்சை ரத்த விருத்திக்கு உகந்தது.அதிக இரும்பு சத்து கொண்டது. தாது விருத்திக்கு ஏற்றது . என்னதிது பழ கேக்குன்னு தலைப்பை போட்டு சயின்ஸ் பாடம் நடத்துறாங்கன்னு  நினைக்காதீங்க..:) மேல சொன்ன இந்த மூன்று பழங்களோட அன்னாசி பழமும் சேர்த்து செய்த கேக்தாங்க இது. இதை ஹெல்தி கேக்னு கூட சொல்லலாம். ஏன்னா.. மற்ற கேக் செய்முறையில முட்டை, வெண்ணை இவை இரண்டும் இடம் பெறும். இரண்டும் இல்லையென்றாலும் ஏதாவது ஓன்று கண்டிப்பாக இடம் பெறும். இந்த கேக்கில் அதுக்கு சப்டியூட்டா ஆலிவ் ஆயில் மட்டுமே சேர்த்து  செய்திருக்கேன். உங்களுக்கும் பிடிக்கும்னு நம்புறேன்..:)
தேவையான பொருட்கள்:-
  • மைதா மாவு                          - ஒரு கப்
  • ஆப்ரிகாட்                               - 100 கிராம்
  • அத்திப்பழம்                           - 100 கிராம்
  • பேரீச்சை                                - 100 கிராம்
  • அன்னாசி பழம்                    - அரை கப்
  • உப்பு                                          - அரை ஸ்பூன்
  • ஆலிவ் ஆயில்                     - 50 மில்லி
  • பேக்கிங் பௌடர்                 - 1ஸ்பூன்
  • தேன்                                         - 100 கிராம்
  • வெள்ளை எள்                       - சிறிது
  • பூசணி விதை                        - சிறிது
செய்முறை
  • அன்னாசிபழத்தை  மிக்சியில் அரைகுறையாக அரைத்து கொள்ளவும்.
  • உலர் பழங்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய உலர் பழங்களையும் அரைத்த அன்னாசி பழத்தையும் போட்டு உப்பு, பேக்கிங் பௌடர், தேன், ஆலிவ் ஆயில் இவைகளையும் சேர்த்து அடுப்பில் வைத்து மெலிதான தீயில் 3 நிமிடம் கலவையை வைத்து எடுக்கவும்.
  • சூடான கலவையை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிடவும்.
  • ஆறிய  கலவையில் மைதாவை சேர்த்து நன்றாக கிளறி கொலகொலப்பாக இல்லாமல் சிறிது திக்காக கலந்து வைக்கவும்.
  • கப்பில் இரண்டு ஸ்பூன்களாக கலவையை வைத்து கலவையின் மேல் வெள்ளை எள், பூசணி  விதைகளை தூவவும்.
  • அவனை முற் சூடு செய்து 180 c யில் பேக் செய்து 20 அல்லது 25 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
  • உலர் பழ கேக் தயார்.

9 comments:

  1. அழகான படங்கள். விரிவான பயனுள்ள செய்முறை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா.

      Delete
  2. சத்துள்ள கேக்! எனக்கு அத்தி-ஆப்ரிகாட் இரண்டு பழங்களுமே அவ்வளவாப் புடிக்காதுங்க! ;) உடம்புக்கு நல்லதெல்லாம் புடிச்சா என்னாகறது? அவ்வ்வ்வ்வ்! ;)))

    ReplyDelete
    Replies
    1. //எனக்கு அத்தி-ஆப்ரிகாட் இரண்டு பழங்களுமே அவ்வளவாப் புடிக்காதுங்க!//
      அதனாலென்ன மகி.. டூட்டி ப்ருட்டி,செர்ரி,கிஸ்மிஸ் இதெல்லாம் சேர்த்து செய்து சாப்பிடலாமே.. வருகைக்கு மிக்க நன்றி.
      உங்களுக்கு பிடிச்ச மஞ்சள் கலர் வேணுமின்னா அன்னாசிக்கு பதில் மாம்பழம் சேர்த்து செய்தா உங்களுக்கு பிடித்த கலரில் கேக் வருமில்ல..)

      Delete
  3. அருமையான படங்கள் மூலம் செய்முறை விளக்கத்திற்கு நன்றி... செய்து பார்ப்போம்...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி சார்..:)

      Delete
  4. அருமையாக இருக்கு. பார்த்து ரசிச்சுட்டு போறேன்.
    இத்தனையையும் என் முன்னே வைச்சா ;) சமைக்க முன்னாடியே பழம் எல்லாம் தீர்ந்துரும் ராதா. ;)

    ReplyDelete
    Replies
    1. வெறும் பழம் சாப்பிடறதை விட அது தலையில கொஞ்சம் தேனும் தினைமாவோ மைதா மாவோ சேர்த்து சாப்பிட்டா சுவையும் கூடி வரும்..வருகைக்கு நன்றி இமா..:)

      Delete
  5. சுப்பு தாத்தா வலைதளத்தில் பார்த்து வருகிறேன்.. என் போன்ற சாப்பாட்டு பிரியர்களுக்கு ஏற்ற தளம் இது.. ( என்னமோ பார்த்து நானே செய்யறது மாதிரி கமெண்ட் போட்டுட்டேன்..)

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)