கதை கேளு... கதை கேளு...

10 comments
ஒரு ஞானி தன் சீடருடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய போயிருந்தார். அவ ஊர் மக்கள் ஞானியை வரவேற்று நன்றாக உபசரித்தார்கள் . அவ் ஊரை விட்டு  வேறு ஊருக்கு செல்லும் போது ஞானி இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரிந்து செல்ல வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார்.மறுநாள் வேறு ஊருக்கு சீடருடன் சென்றார். அங்கு மக்கள் அவரை மதிக்கவில்லை. அவரின் உபதேசத்தை கேட்கவில்லை. அவ் ஊரை விட்டு சென்ற ஞானி இறைவனிடம் இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டினார்.  சீடர் ஒன்றும் புரியாமல் நம்மை மதித்து மரியாதை செய்த மக்களை பிரிய சொல்கிறீர்கள், நாகரீகம் தெரியாத இம் மக்களை அவர்கள்  பிரியாமல் இவ் ஊரிலேயே இருக்க வேண்டும் என்று தாங்கள் கூறும் காரணம்  எனக்கு விளங்க வில்லை என்று சீடர் கேட்டார். அதற்கு ஞானி நல்ல மனிதர்கள் நான்கு திசைகளில் பிரிந்து போனால் அவர்களிடம் பழகும்  தீய மனிதர்கள் நல்லவர்களாக மாறுவதற்கு வழி கிடைக்கும், ஆனால் ஒரே ஊரில் உள்ள தீய மனிதர்கள்  பிரிந்து போகாமல்  ஒரே இடத்தில் இருந்தால் அவர்களிடம் உள்ள தீய குணங்கள் மற்றவர்களிடம் பரவாமல் இருக்கும் . அதனால்தான் இவ்வாறு கூறினேன என்றார்.
                                                             இந்த கதையை படித்து விட்டு என் மகன் சின்னவர் என்னிடம் கேட்ட கேள்வி அம்மா...பூவோட சேர்ந்த நாறும் மணம் பெறும்.. பன்றியோட சேர்ந்த கன்றும் மலம் தின்னும்.. அதெப்பிடி இந்த கதையால இந்த பழமொழியோட லாஜிக் எங்கியோ உதைக்குதே..? ஏன் அந்த ஊரில் இருந்து பிரிந்து செல்லும் நல்லவர்கள்  கெட்டவர்களுடன் சேர்ந்து  கெட்டவர்களாக மாறிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..? என்ற கேள்வியை என் முன் வைத்தார். எனக்கு பதில் தெரியல்லை... படிக்கிற நீங்க என்ன சொல்றீங்க...?

10 comments:

  1. பழமொழி சொன்னால் கேள்விகள் கேட்கப்படாது... அனுபவிக்கனும்...

    ReplyDelete
  2. //அம்மா...பூவோட சேர்ந்த நாறும் மணம் பெறும்.. பன்றியோட சேர்ந்த கன்றும் மலம் தின்னும்.. அதெப்பிடி இந்த கதையால இந்த பழமொழியோட லாஜிக் எங்கியோ உதைக்குதே..? ஏன் அந்த ஊரில் இருந்து பிரிந்து செல்லும் நல்லவர்கள் கெட்டவர்களுடன் சேர்ந்து கெட்டவர்களாக மாறிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..? //

    தங்கள் மகனின் சிந்தனை சிறு வயதிலேயே ‘மாற்றி யோசிப்பதாக’ அமைந்துள்ளது.

    சில சமயம் சில குழந்தைகள் நம்மிடம் கேட்கும் இதுபோன்ற கேள்விகள் நம்மையே சிந்திக்க வைக்கும்.

    பதில் நம்மாலும் உடனடியாகக்கூற முடியாமல் ஸ்தம்பிக்கத்தான் வைக்கும். ஏதோ சமாலித்து தான் பதில் கூற வேண்டியிருக்கும்.

    பகிர்வுக்கு ந்ன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. என் இளைய மகன் இப்படித்தான் அடிக்கடி கேள்வியினால் ஸ்தம்பிக்க வைப்பார்..இளையவரின் ஆங்கில வலையை சென்று பாருங்கள் அண்ணா..
      அவரின் ஆங்கில வலைதளத்தின் லின்க் கீழே..
      Blogtipsntricks.com

      Delete
  3. சென்ற என் பின்னூட்டத்தில் “சமாலித்து” என தவறாக எழுத்துப்பிழை ஆகிவிட்டது.

    அது ”சமாளித்து” என இருக்க வேண்டும்.

    ஏதோ நானும் சமாளிப்பதாக நினைக்க வேண்டாம்.

    உண்மையில் இந்த எழுத்துப்பிழைக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பதிவுலக ஜாம்பவான்களில் ஒருவர் தாங்கள்..எத்தனை பதிவுகள் எழுதினாலும் பிழை வருவது சகஜம்தானே..ஆனைக்கும் அடி சறுக்கும்தானே..:)

      Delete
  4. கதையிலிருந்து கிடைக்கிற நல்லதையே எடுத்துக்குவோம்! என்றாலும் மாத்தி யோசிக்கிற திறமையும் வேணும்தான்!

    ReplyDelete
  5. வருகைக்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  6. புத்திசாலி சின்னவர். சரி என்ன பதில் சொன்னீங்க? ;)

    ReplyDelete
  7. பதில் என்ன சொல்றதுன்னு தெரியாம இன்று வரை குழம்பி போயுள்ளேன் இமா..:)

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)