தேவையான பொருட்கள்:-
- அரிசி - 500 கிராம்
- தயிர் - 100 கிராம்
- சின்ன வெங்காயம் - 20
- புதினா இலை - ஒரு கைபிடி (ஆய்ந்தது)
- பட்டை - ஒன்று
- கிராம்பு - 3
- அன்னாசி பூ - 2
- பிரிஞ்சி இல்லை - 1
- ஏலக்காய் - 2
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- நெய் - 50 கிராம்
- முந்திரி - 10 கிராம்
- பச்சை மிளகாய் - 5
- தேங்காய் பால் - 100 மில்லி
செய்முறை:-
- அரிசியை நன்றாக கழுவி 10நிமிடம் ஊறவிடவேண்டும்.
- குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி காய்ந்த உடன் பட்டை, கிராம்பு, அன்னாசிபூ, பிரிஞ்சி இலை, நசுக்கிய ஏலக்காய், போட்டு வதக்க வேண்டும்.
- அடுத்து சின்ன வெங்காயம், வெட்டிய பச்சை மிளகாய்,போட்டு வதக்கி பின் இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
- இதனுடன் தயிரையும், தேங்காய் பாலையும் சேர்த்து நன்றாக கலக்கி விட்டு புதினா இலைகளை போட்டு 500கிராம் அரிசிக்கு தேவையான நீரை (4 டம்ளர் ) விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதித்த பின் அரிசியை போட்டு குக்கரை மூடி 3 விசில் வந்த உடன் இறக்கி விட வேண்டும்.
- 5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து சிறிது நெய்யில் முந்திரியை போட்டு வறுத்து புலாவில் கொட்டி கிளறி விட வெள்ளை புலாவ் தயார்.
- குருமா, ரெய்தா உடன் பரிமாற சுவையாக இருக்கும்.
மஞ்சள் தூள் சேர்க்காமல் ரொம்ப அழகா வெளேரென்று இருக்கு புலாவ் சாதம் ..நான் தேங்காய்பால் மட்டும் தான் சேர்த்திருக்கேன் ,,இம்முறையில் செய்து பார்த்து சொல்கிறேன்
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றி ஏஜ்சலின் .செய்து பாருங்கள் .
Deleteபுலாவ் சாதம் மிகவும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteசெய்துப் பார்க்கிறேன்.
செய்து பாருங்க அக்கா..தொடர்வதற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
Deleteருசியான செய்முறை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்>
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றியண்ணா..
Deleteவெள்ளை புலாவ் வித்தியாசமாக உள்ளது.
ReplyDeleteDear Radha
ReplyDeleteCongrats... You have been nominated for Liebster Blog Award.please check my blog for more details.
luv
Meena
I'm glad to hear it.. Thanks for nominating me for your valuable award.
DeletePulao looks yummy! I used to add veggies, never tried plain pulao.
ReplyDeletetnks mahi..
ReplyDeleteAlso try it this method.
Hi radha,
ReplyDeletepulao sounds simple and delicious..
U have a wonderful space, glad to follow u :)
thanks for visiting my blog.:)
ReplyDeleteவெள்ளை புலாவ் சூப்பர்,அன்னாசிப்பூ சேர்த்திருப்பது புதுமணமாக இருந்திருக்குமே!
ReplyDeleteஉங்கள் தளம் என் dashboard-ல் வரவில்லை... என்னவென்று பார்க்க வேண்டும்... அதான் தாமதம்...
ReplyDeleteகுறிப்பிற்கு நன்றி...
புலாவ் சூப்பர்.
ReplyDeleteநன்றாக இருக்கிறது.
ReplyDeleteஎனக்கு சமையலே தெரியாது இருந்தாலும் இதை முயற்சிக்கிறேன் இந்த வாரம் ஞயிறு அன்று
ReplyDeleteமுதல் வருகைக்கு மிக்க நன்றி சகோ.. முயற்சியுங்கள் சகோ..:) நன்றி.
ReplyDelete