கொழுக்கட்டை பிள்ளையாருக்கு ரொம்ப பிடித்தமான நைவேத்யம். அதை பல விதத்துல செய்து பல பெயரும் வைப்பாங்க. சின்ன வயசுல கொழுக்கட்டையை பத்தி ஒரு பாட்டு நாம எல்லாம் கேள்வி பட்டிருப்போம்.
சின்ன பிள்ளைங்க இந்த பாட்டை பாடிக்கிட்டே விளையாடுவாங்க.. அந்த பாட்டு..
சின்ன பிள்ளைங்க இந்த பாட்டை பாடிக்கிட்டே விளையாடுவாங்க.. அந்த பாட்டு..
மா கொழுக்கட்டைவிநாயகர் சதுர்த்திக்கு பண்ணிய கொழுக்கட்டையை போட்டோ எடுத்து வைத்தாச்சு. ஆனா எழுத தட்டினது அரை குறையா முடிக்க முடியாம தள்ளி போய்கிட்டே இருந்தது. இன்னிக்கு முழுசும் முடித்து கொழுக்கட்டை பதிவை தேத்தியாச்சு..:)
மஞ்ச கொழுக்கட்டை
மாமியார் தந்தார்
பிடி கொழுக்கட்டை
அத்தை தந்தார்
அவல் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :-
- அவல் - கால் கிலோ
- பிட்டரிசி மாவு - 100 கிராம்
- நெய் - 1 ஸ்பூன்
- வெல்லம் - 200 கிராம்
- தேங்காய் துருவல் - சிறிது
செய்முறை :-
- அவலை சுத்தம் செய்து தண்ணீரில் நன்றாக கழுவி வடிகட்டி 10 நிமிடம் ஊற வைத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் ஊறிய அவல்,பிட்டரிசி மாவு , நெய்,தேங்காய் துருவல் அனைத்தையும் போட்டு ரெடியாக வைக்க வேண்டும்.
- வெல்லத்தை முழ்கும் அளவு தண்ணீர் விட்டு வெல்லம் கரையும் வரை பாகு வைத்து வடிகட்டி மீண்டும் காய்ச்சி இறக்க வேண்டும்.
- வெல்ல கரைசலை பாத்திரத்தில் உள்ள அவல் கலவையில் ஊற்றி கரண்டி வைத்து கிளற வேண்டும்.
- கட்டியாக கிளறிய அவல் கலவையை கொலுகட்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
- அவல் கொழுக்கட்டை தயார்.
விநாயகர் சதுர்த்தி அன்றும்... இன்றும் செய்தாலும் விசேசம் தான்... நன்றி...
ReplyDeleteஒவ்வொரு Widget பக்கத்திலும் Edit பட்டன் வருகிறது... சரி பார்க்கவும்...
Visit : http://www.bloggerplugins.org/2010/04/remove-quick-edit-and-wrench-on-blogger.html
Deleteதுரித வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி தனபாலன் சார்..Edit பட்டன் சரி செய்து விட்டேன்..:)
ReplyDeleteஅவல் கொழுக்கட்டை செய்முறை மிகவும் சிறப்பாக இருக்கிறது ராதா! செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். பிட்டரிசி மாவு என்றால் சிகப்பரிசி மாவா அல்லது பச்சரிசி மாவா?
ReplyDeleteபச்சரிசி மாவுதான் மேடம் .. பச்சரிசியை மாவாக திரித்து அவித்து காய வைத்த மாவைத்தான் பிட்டரிசி மாவு என்று கூறுவோம் நாங்கள். செய்து பாருங்கள் மேடம் . வருகைக்கு மிக்க நன்றி..:)
Deleteமனோ மேடம்.. அவல், தகட்டவலாக இல்லாமல் நல்ல கெட்டி அவலாக இருக்க வேண்டும். அதுதான் கழுவி விட்டு அந்த ஈரப்சையிலே ஊற வைத்த பின் பொல பொல வென்று பூவாக இருக்கும் . பாகு சேர்த்த பின் கொழுக்கட்டை பிடிக்க சரியாக வரும்.
Deleteகொழுக்கட்டை என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும் எனக்கும் அதே சந்தேகம் பச்சரிசி மாவா ?
ReplyDeleteஅவிய வைத்த பச்சரிசி மாவுதான் சசி.. இந்த மாவு கைவசம் இருந்தால் புட்டு, கொழுக்கட்டை , இடியாப்பம் என்று வேண்டியதை நிமிடத்தில் செய்யலாம். வருகைக்கு நன்றி சசி..:)
Deleteமிகவும் ருசியான பதிவு. படங்களும் செய்முறை விளக்கங்களும் அருமை.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா ..:)
Deleteகொழுக்கட்டை நல்லா இருக்குங்க. நான் அவலில் செய்ததில்லை. வெள்ளை அரிசிமாவு சேர்த்து செய்துபார்க்கிறேன்.
ReplyDeleteபச்சரிசி மாவை விட அவித்த மாவில் செய்வதுதான் நல்லா இருக்கு மகி.. செய்து பாருங்க .. வருகைக்கு நன்றி.
Deleteகொழுக்கட்டை நல்லா இருக்குது. பக்குவம் அருமை.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதியக்கா..:)
Deleteகொழுக்கட்டையும் நல்லா இருக்கு மாகொழுக்கட்டை பாடலும் நன்றாக இருக்கு
ReplyDeleteபொருத்தமாக பாடல் எல்லாம் நினைவுபடுத்தி... கலக்கல் இடுகை ராதா.
ReplyDeleteஅவல் கொழுக்கட்டை ரொம்ப அருமை
ReplyDeleteஎன் பிலாக் போஸ்ட் உங்கள் டேஷ் போர்டில் வரவில்லை, ஆமாம் நிறைய பேருக்கு வரவில்லை.
அதற்கு நீங்க என் பிலாக்கை அன் பாலோ செய்து விட்டு மறுபடி பாலோசெய்யனும்..
முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்
என் பக்கம் வந்தமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்