தேவையான பொருட்கள் :-
வடை செய்ய :-
- உளுந்து - 100 கிராம்
- மிளகு - அரை ஸ்பூன்
- உப்பு - சிறிது
- தயிர் - 300 மில்லி
மிக்ஸர் செய்ய :-
- கடலை மாவு - 100கிராம்
- அரிசி மாவு - 3 ஸ்பூன்
- பெருங்காய பொடி - சிறிது
- உப்பு - சிறிது
- கடலை பருப்பு - 50 கிராம்
- கருவேப்பிலை - 2 ஆர்க்கு
- மல்லி தழை - சிறிது
- மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
செய்முறை :-
- கடலை பருப்பை கழுவி விட்டு நீரில் அரை மணி நேரம் ஊற விட வேண்டும்.
- கடலை மாவு, அரிசிமாவு இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது நீர் விட்டு கட்டியாக முறுக்கு மாவு பதத்தில் முதலில் பிசைய வேண்டும்.
- அதை ஓமப்பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெய்யில் பிழிய வேண்டும்.
- பாதி மாவு பிழிந்த உடன் மீதி மாவில் மேலும் சிறிது நீர் சேர்த்து தளர கரைத்து சூடான எண்ணெய்யில் பூந்தி கரண்டியை வைத்து மாவை தேய்த்து கார பூந்தியாக எடுக்க வேண்டும்.
- அதே சூடான எண்ணெய்யில் ஊறிய கடலை பருப்பை போட்டு கோல்டன் கலர் வந்தஉடன் எடுத்து ஓமப்பொடி, காரபூந்தியில் போட்டு கருவேப்பிலையையும் எண்ணெய்யில் போட்டு முறுகலாக எடுத்து இதனுடன் சேர்க்க வேண்டும்.
- இறுதியில் அனைத்தையும் ஒரு சேர கைகளால் பிசைந்து நொறுக்கினால் மிக்சர் தயார்.
- வடை செய்ய ஊறிய உளுந்தை நைஸாக அரைத்து அதனுடன் உப்பையும், தூளாக்கிய மிளகையும் சேர்த்து பிசைந்து வடைகளாக எண்ணெய்யில் சுட்டு எடுக்க வேண்டும்.
- பரிமாறும் பொழுது தட்டில் இரண்டு வடைகளை வைத்து அதன் மேல் 4 கரண்டி தயிரை ஊற்றி மிக்சரை அதன் மேல் வைத்து மிளகாய் பொடி தூவி சிறிது மில்லி இலைகளை பொடியாக நறுக்கி மேலே வைத்து பரிமாற வேண்டும்.
- தயிர் வடை தயார்.
தயிர் வடையோடு மிக்ஸர்-சூப்பர்...
ReplyDeleteநன்றி...
தயிர் வடை சூப்பர்.கைப் பக்குவம் நல்லாயிருக்கு.
ReplyDeleteIvvalavu easy-yaa mixture seyya solli kuduthitteenga? :) super! I love Thayir vadai!
ReplyDeletewow... yummy yummy :)
ReplyDeleteருசியான பகிர்வு. பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமையான குறிப்பு! பாராட்டுக்கள்!!
ReplyDeleteஎன்ன வண்ணமயமான தயிர் வடைகள்!
ReplyDeleteதயிர்வடை கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிட்டது கிடையாது. குறித்துக் கொள்கிறேன்.
ReplyDelete