தயிர் வடை

8 comments
தேவையான பொருட்கள் :-
வடை செய்ய :-
  • உளுந்து - 100 கிராம்
  • மிளகு - அரை ஸ்பூன்
  • உப்பு - சிறிது
  • தயிர் - 300 மில்லி
மிக்ஸர் செய்ய :-
  • கடலை மாவு - 100கிராம்
  • அரிசி மாவு - 3 ஸ்பூன்
  • பெருங்காய பொடி - சிறிது
  • உப்பு - சிறிது
  • கடலை பருப்பு - 50 கிராம்
  • கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  • மல்லி தழை - சிறிது
  • மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
செய்முறை :-
  • கடலை பருப்பை கழுவி விட்டு நீரில் அரை மணி நேரம் ஊற விட வேண்டும்.
  • கடலை மாவு, அரிசிமாவு இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது நீர் விட்டு கட்டியாக முறுக்கு மாவு பதத்தில் முதலில் பிசைய வேண்டும்.
  • அதை ஓமப்பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெய்யில் பிழிய வேண்டும்.
  • பாதி மாவு பிழிந்த உடன் மீதி மாவில் மேலும் சிறிது நீர் சேர்த்து தளர கரைத்து சூடான எண்ணெய்யில் பூந்தி கரண்டியை வைத்து மாவை தேய்த்து கார பூந்தியாக எடுக்க வேண்டும்.
  • அதே சூடான எண்ணெய்யில் ஊறிய கடலை பருப்பை போட்டு கோல்டன் கலர் வந்தஉடன் எடுத்து ஓமப்பொடி, காரபூந்தியில் போட்டு கருவேப்பிலையையும் எண்ணெய்யில் போட்டு முறுகலாக எடுத்து இதனுடன் சேர்க்க வேண்டும்.
  • இறுதியில் அனைத்தையும் ஒரு சேர கைகளால் பிசைந்து நொறுக்கினால் மிக்சர் தயார்.
  • வடை செய்ய ஊறிய உளுந்தை நைஸாக அரைத்து அதனுடன் உப்பையும், தூளாக்கிய மிளகையும் சேர்த்து பிசைந்து வடைகளாக எண்ணெய்யில் சுட்டு எடுக்க வேண்டும்.
  • பரிமாறும் பொழுது தட்டில் இரண்டு வடைகளை வைத்து அதன் மேல் 4 கரண்டி தயிரை ஊற்றி மிக்சரை அதன் மேல் வைத்து மிளகாய் பொடி தூவி சிறிது மில்லி இலைகளை பொடியாக நறுக்கி மேலே வைத்து பரிமாற வேண்டும்.
  • தயிர் வடை தயார்.

8 comments:

  1. தயிர் வடையோடு மிக்ஸர்-சூப்பர்...

    நன்றி...

    ReplyDelete
  2. தயிர் வடை சூப்பர்.கைப் பக்குவம் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  3. Ivvalavu easy-yaa mixture seyya solli kuduthitteenga? :) super! I love Thayir vadai!

    ReplyDelete
  4. ருசியான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. அருமையான குறிப்பு! பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  6. என்ன வண்ணமயமான தயிர் வடைகள்!

    ReplyDelete
  7. தயிர்வடை கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிட்டது கிடையாது. குறித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)