தேவையான பொருட்கள்:-
- தக்காளி - கால் கிலோ
- பல்லாரி வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 5
- தேங்காய் பால் - 1 கப்
- கருவேப்பிலை - சிறிது
- மிளகாய் பொடி - கால் ஸ்பூன்
- சீரக பொடி - கால் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு , உளுந்து - 1 ஸ்பூன்
- மல்லி செடி - சிறிது
செய்முறை:-
- தக்காளியை கட் பண்ணி வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்க வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
- வெங்காயம் வதங்கிய உடன் நறுக்கி வைத்த தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.
- தக்காளி வதங்கிய உடன் மிளகாய் பொடி, சீரக பொடி, உப்பு போட்டு நன்றாக பிரட்டி விட வேண்டும்.
- மிளகாய்பொடி சீரக பொடி வதங்கி கலர் மாறிய உடன் அரைத்தெடுத்த தேங்காய் பாலை ஊற்றி அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து கலக்கி விட்டு குழம்பு கொதித்த உடன் இறக்கி வைக்க வேண்டும்.
- தக்காளி தேங்காய் பால் குழம்பு தயார்.
kuzhambu super.
ReplyDeleteநன்றி ஆசியா.:)
Deleteசுவையான குழம்பு...செய்முறை அருமை
ReplyDeleteவருகைக்கு நன்றி பாக்யா:)
Deleteபடங்களும் செய்முறை விளக்கங்களும் அழகோ அழகு.
ReplyDeleteபுதுமையான ருசிகரமான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
This comment has been removed by the author.
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சியண்ணே..:)
Deleteமோர்க்குழம்பு தான் கேள்விப்பட்டுள்ளேன். காரசாரமாக ருசியாக இருக்கும்.
ReplyDeleteபால் குழம்பு அதுவும் ... தேங்காய்ப்பால் குழம்பு
புதுமையாக உள்ளது. ;)
தக்காளியுடன் சேர்ந்து செய்வதால் சற்று புளிப்பும் திதிப்புமாக இருக்குமோ?
எனினும் நன்றி.
தக்காளி பழ சுவையை பொறுத்து குழம்பின் சுவையும் அமையும் அண்ணே...இது கேரள பாணி சமையல் ,தேங்காயை அப்படியே அரைத்து செய்வதை விட அதில் பால் எடுத்து செய்தால் சுவையும் மணமும் அபாரம்.
ReplyDeleteசுவையான தேங்காய்ப்பால் குழம்பு ..
ReplyDeleteபகிர்வுக்கு பாராட்டுக்கள்..
வருகைக்கு மிக்க நன்றி மேடம் ..:)
Deleteஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
முதல்முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்... எடுத்த எடுப்பிலேயே கோலங்கள் படங்கள் மிக அழாகாக உள்ளன... 3டி படங்கள் போன்ற உணர்வு...best wishes.
ReplyDeleteதக்காளி குழம்பு பாலுக்குப்பதில் தேங்காய் அரைத்து சேர்த்து நானும் செய்வதுண்டு...
First time here.. u have a wonderful blog & all informations are really impressive.Tomato kuzhambu is really good & yummy.. will try it soon.
ReplyDeleteபயனுள்ள தகவலுக்கு நன்றி தக்காளி ஜூஸ் நன்மைகள், பயன்கள் மற்றும் செய்முறை
ReplyDelete