மலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி
காடும் காடு சார்ந்த நிலமும் - முல்லை
வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம்
கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல்
மணலும் மணல் சார்ந்த நிலமும் - பாலை
என்ன.. அடையும் கார சட்னியும்னு தலைப்பை போட்டு தமிழ் பாடம் நடத்துறாங்க அப்பிடின்னு நினைக்காதீங்க... ஏன்னா.. இப்ப ஆறாவதா ஒரு நிலம் உருவாயிருக்கு. அது
அட ஆமாங்க நம் தமிழ்நாட்டின் நிலை அப்பிடி ஆகிபோச்சு.. இந்த கரண்ட்டை நம்பி எந்த வேலையும் செய்ய முடியல்லை.. பாருங்க அடைதோசைக்காக பருப்பு ஊற வைத்தேன். கடந்த சில மாசமா காலையில் 6 மணிக்கு போற கரண்ட் 10 மணிக்குதான் வரும். அதனால பசங்கள ஸ்கூல்,கல்லூரிக்கு ரெடியாக்கும் அம்மாக்கள் எல்லாம் 5 மணிக்கே எழுந்து ஆட்டுற, அரைக்கிற வேலையை முதல்ல செய்துடுவாங்க.. நான் அடைதோசைக்கு ஊற வைத்த அன்று 5.30க்கே கரண்ட் போயிடுத்து.. இனி 10மணிக்குதான் வரும், ஆட்டுக்கல்லுல போட்டு ஆட்டி எடுத்திரலாம்னு மூலையில கிடந்த கல்லை நல்லா கழுவி அதுல ஆட்டி எடுத்து திரும்பவும் கழுவி மறுபடியும் காரசட்னிக்கு அரைத்து அடுத்து அம்மியில லன்ச் ப்ரிபரேசனுக்கு தேவையானதை அரைத்து உஸ் அப்பாடான்னு... ஆகிபோச்சு போங்க..:( ஆனா ஒரு சந்தோஷம் மிக்சி, கிரைண்டர்ல அரைத்து சாப்பிடுர டேஸ்ட்டை விட அம்மி, ஆட்டுக்கல்லுல அரைச்சி சாப்பிட்டா அந்த டேஸ்டே தனிதான். என்ன பண்ணறது.... இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரைன்னு சொல்றா மாதிரி நாமளும் மாறிட வேண்டியதுதான்..:) சரி அடைதோசை சாப்பிடலாம் வாங்க.இருளும் இருள் சார்ந்த நிலம் - தமிழ்நாடு
அடைதோசை:-
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - ரெண்டு கைப்பிடி
- துவரம் பருப்பு - ரெண்டு கைப்பிடி
- பாசிப்பருப்பு - ரெண்டு கைபிடி
- உளுந்து - ஒரு கைப்பிடி
- உப்பு - அரை ஸ்பூன்
- மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன்
செய்முறை:-
- அரிசி பருப்புகளை 15 நிமிடம் ஊறவைத்து ஆட்டுக்கல்லில் போட்டு உப்புடன் அரைத்து எடுத்து மிளகாய் பொடியை சேர்த்து நன்கு கலந்து தேவையானால் சிறிது நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்க வேண்டும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் மாவை ஊற்றி வட்டமாக இழுத்து எண்ணெய்யோ, நெய்யோ இரண்டு ஸ்பூன் ஊற்றி நன்றாக வெந்த உடன் திருப்பி போட்டு 2நிமிடத்தில் எடுக்க வேண்டும்.
- அடை தோசை தயார்.
கார சட்னி:-
தேவையான பொருட்கள்
- தேங்காய் - கால் மூடி
- மிளகாய் வற்றல் - 5
- பூண்டு - 2பல்
- கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
- பொரிகடலை - ஒரு கைப்பிடி
- உப்பு - சிறிது
செய்முறை:-
- பொரிகடலை தவிர மற்ற பொருட்களை எண்ணெயில் நன்றாக வதக்கி எடுத்து உப்புடன் ஆட்டுக்கல்லில் போட்டு அரைத்து சிறிது அரைபட்ட உடன் பொரிகடலையை போட்டு வழு வழுப்பாக இல்லாமல் கொர கொரவென்று அரைத்து எடுத்து தேவையானால் சிறிது நீர் ஊற்றி கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து இறுதியில் கடுகு, உளுந்து தாளித்து கொட்ட வேண்டும்.
- கார சட்னி ரெடி.
மிக அருமையான பகிர்வு.நானும் இன்று அடை குறிப்பு தான் பகிர்ந்திருக்கிறேன்.என்ன பொருத்தம்.உங்க முறையும் செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteஉங்க செய்முறை குறிப்பையும் பார்த்தேன் ஆசியா..மிக்க மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி.
Deleteஎங்க அம்மா செய்வாங்க அந்த நினைவு வருகிறது. நன்றி தோழி.
ReplyDeleteவாங்க சசி..கருத்திற்கு மிக்க நன்றி.
Deleteருசிமிக்க பகிர்வு. பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி அண்ணா..:)
Deleteமிளகாப் பொடி சேர்த்து அடை! வித்யாசமா இருக்குங்க. பார்க்கவே சூப்பரா இருக்குது. அதுவும் ஆட்டாங்கல்லில் அரைச்சு செய்தது தனி ருசிதான்! சட்னியோட 2 அடை பார்சல் ப்ளீஸ்! ;) :)
ReplyDeleteபவர் கட்டினால அந்த நிமிஷம் வந்த ஐடியா மகி..வத்தலையும் போட்டு ஆட்டினா நேரம் இழுக்கும்.அதனால பொடி..:)அதுலயும் ருசி அபாரம்தான் மகி...பார்சல் அனுப்பிட்டேன்..சாப்பிடுங்கோ..
Deleteதங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com
வலைசர அறிமுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி மேடம்..!
Deleteவாவ்..அடை நாவூறச்செய்கிறது.கூடவே சட்னியும்..ம்ம்ம் யம்ம்மி
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸாதிகா..:)
ReplyDelete