மயக்கும் மார்கழி

8 comments

மார்கழி மாதத்தை கடவுளை வழிபடும் மாதமாக அனைவரும் அதிகாலையில்  எழுந்து குளித்து கோவிலுக்கு செல்கின்றனர்.
முன்பனிக்காலம் மார்கழி தொடங்கி விட்டது. இதை உத்தராயண காலம் என்று சொல்வார்கள். சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலம். தேவர்களின் விடிகாலை பொழுது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம், தேவர்களின் இரவு பொழுது..தை முதல் ஆனி வரை பகல் பொழுது. அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த வேளையாக கருத படுகிறது. எனவே இந்த மாதம் அனைவரும் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து வாசலில் கோலம் போட்டு வீட்டில் விளக்கேற்றி பின் அருகில் இருக்கும் கோவிலுக்கும் சென்று வருவர். அதனால் இந்த மாதம் சுறுசுறுப்பான மாதமாக காலை வேளையில் இருக்கும். பஜனை கோஷ்டியும், கோவில்களில் முழங்கும் பக்தி பாடல்களும் அனைவருக்கும் பக்தியையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும். அறிவியல் ரீதியாக  பார்க்கும் பொழுது அதிகாலை பொழுது கோவிலுக்கு செல்வோருக்கு அந்த வேளையில் ஓசோன் படலம் அதிகமாக இருப்பதால் ஆக்சிஜன் அதிகமாக கிடைத்து ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் ஒரு காரணமாக உத்தராயண காலத்தை சொல்லலாம்.



                                       இந்த சீசன்ல மணம் தரும் மலர்கள் கிடைப்பது மிக அரிது..அதனால அதிகாலை சுவாமி தரிசனத்திற்கு படத்தில் இருக்கும் இந்த மலர்களைதான் பூஜைக்கு கொடுக்க போகிறேன்..தோட்டத்தில் அதிகமாக இந்த மலர்கள் பூத்திருப்பதும் வண்ணத்துப்பூச்சிகள் அதிகமாக பறந்ததும் போட்டோ எடுத்தாச்சு..:) கேந்தி பூ என்று இங்க சொல்லுவாங்க..இந்த பூவிற்கு நீங்க என்ன பேர் சொல்வீங்க.
பூ பூவா பறந்து போகும் வண்ணத்து பூச்சியக்கா..நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா..
என்ன.. துருதுருன்னு பாக்குற..
தப்பிக்க எங்க வழி இருக்குனு பாக்குறேன்..நீ என்னடான்னா அக்கா..சொக்கா..னு பாடுறே. எனக்கு பயத்துல கக்கா..வருது.

8 comments:

  1. மலர்கள் படங்களும், பட்டாம்பூச்சிப்படங்களும் அழகோ அழகு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. //முன்பனிக்காலம் மார்கழி தொடங்கி விட்டது. இதை உத்தராயண காலம் என்று சொல்வார்கள். //

    ?????????

    //ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம் //

    இது தான் சரி.

    ReplyDelete
  3. தை முதல் [தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி + ஆனி] 6 மாதங்கள் மட்டுமே உத்தராயணம் என்பது.

    ஆடி முதல் [ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை + மார்கழி] 6 மாதங்கள் மட்டுமே தக்ஷிணாயனம் என்பது.

    தங்கள் தகவலுக்காக மட்டுமே!

    ReplyDelete
  4. பதிவும் அதன் விபரங்களும் பூக்களும் வண்ணத்துப்பூச்சியும் மிக அழகு! ஊர் நினைவும் மார்கழிப்பொழுதுகளும் நினைவுக்கு வ‌ருகின்றன!

    ReplyDelete
  5. படங்கள் பிரமாதம்.வர்ணனை அதை விட பிரமாதம்

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு.பட்டாம் பூச்சி கிட்ட போனாலே பட்டுன்னு பறந்துவிடும்.எப்படி கையில் வைத்து படம் எடுத்தீங்க..

    ReplyDelete
  7. கேந்தி பூ என்று இங்க சொல்லுவாங்க..இந்த பூவிற்கு நீங்க என்ன பேர் சொல்வீங்க.

    துலுக்க சாமந்தி என்று சொல்லுவார்கள்..

    சிலகோவில்களில் துலுக்கசாமந்தி பூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவித்திருப்பார்கள்..

    பூக்கார அம்மாவிடம் கேட்டபோது இந்தப்பூ கட்டினால் உடல் உஷ்ணமாகி கண்கள் பொங்கும் என்கிறார் ..

    இந்த அதீத உஷ்ணத்தினாலேயே காற்று வசதி இல்லாத கர்ப்பக்கிரகங்களில் உபயோகப்படுத்துவதில்லை ..

    ReplyDelete
  8. இந்தப்பூவை சென்ட் - வாசனைத்திரவியம் தயாரிக்க பயன்படுத்துகிறார்களாம் ..

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)