சுண்டல்

12 comments
தேவையான பொருட்கள்:-
 • பாசிப்பயறு                         - 200கிராம்
 • தேங்காய் துருவல்            -சிறிது
 • மாங்காய்                              -  அரை காய்
 • மிளகாய் வற்றல்                - 3
 • கடுகு,உளுந்தம்பருப்பு      -     1ஸ்பூன் 
 • கருவேப்பிலை                     -சிறிது 
 • உப்பு                                          -     சிறிது 
செய்முறை:-
 • பாசிப்பயறை  நன்றாக கழுவி 3டம்ளர் தண்ணீர்  விட்டு குழையாமல் வேகவைத்து  எடுக்க வேண்டும்.
 • அடுப்பில்  வாணலியை வைத்து சிறிது எண்ணெய்  விட்டு கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் வற்றலை ஒடித்து போட்டு அதனுடன் கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
 • இதனுடன் பொடியாக நறுக்கிய  மாங்காய்,துருவிய தேங்காய்,வேக வைத்த  பாசிபயறு,சேர்த்து தேவையான  உப்பையும்  சேர்த்து நன்றாக  பிரட்டி எடுத்து வைக்க  வேண்டும்.
 • சுண்டல் தயார். இது  சர்க்கரை  நோயாளிகளுக்கு  ஏற்ற மாலை நேர சிற்றுண்டி

12 comments:

 1. மாங்கா போட்ட சுண்டலா
  ருசி தூக்கலாதான் இருக்கும் போங்க

  ReplyDelete
 2. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதொரு சத்தான சிற்றுண்டி...
  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 3. விரைவான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ :)மாங்காய் சேர்த்தால் சுண்டலின் சுவை மிக கூடுதலாக இருக்கும் சகோ..

  ReplyDelete
 4. உடன் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ..:)பயறை ஊற வைத்து முளை கட்டி சுண்டல் செய்தால் மிகுந்த சத்தும் கூட சகோ.

  ReplyDelete
 5. அட.. சுண்டல்ல.. மாங்காயா.. இதுவரை நான் இப்பிடி சாப்பிட்டதில்லையே..!

  ReplyDelete
 6. வாங்க தம்பி வரலாற்று சுவடுகள்...சாப்பிட்டு பாருங்க..கொண்டை கடலை,கடலை பருப்பு, எந்த வகை சுண்டல் செய்தாலும் அதோட மாங்காய் சேர்த்து செய்தால் அதன் சுவையே தனிதான் ...வருகைக்கும் ,பகிர்விற்கும் மிக்க மகிழ்ச்சி தம்பி.:)

  ReplyDelete
 7. சுண்டல் செய்முறை விளக்கமும், ப்டங்களும் அருமை.

  தேங்காய் + மாங்காய் போட்ட எல்லா சுண்டல்களுமே ருசியோ ருசியாகத்தான் இருக்கும்.

  பகிர்வுக்கு நன்றி.

  .

  ReplyDelete
 8. வாங்க அண்ணா...கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.:)

  ReplyDelete
 9. மாங்காய் போட்ட சுண்டல் மிகவும் அருமை அக்கா... எனக்கு மாங்காய் என்றால் ரொம்ப பிடிக்கும் .அதிலும் பயிரில் மாங்காய ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் சூப்பர் .....

  ReplyDelete
 10. விஜி..நேரம் கிடைக்கிறப்ப செய்து பாருங்க..வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க
  மகிழ்ச்சி விஜி.:)

  ReplyDelete
 11. எனக்கு இப்போதே வேண்டும் சகோ சுண்டல்.

  ReplyDelete
 12. வாங்க சசி..கவிதாயினிக்கு இல்லாத சுண்டலா...வருகைக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க மகிழ்ச்சி சசி:)

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)