வெண்டைக்காய் தீயல்

16 comments
தேவையான பொருட்கள் :-
 • வெண்டைகாய்                                   -அரை கிலோ
 • சின்ன வெங்காயம்                           - 10
 • மசால் பொடி                                       -  2ஸ்பூன்
 • மிளகாய் பொடி                                   - 1ஸ்பூன்
 • சர்க்கரை                                               - 2 ஸ்பூன்
 • எலுமிச்சை                                          - அரை மூடி
 • உப்பு                                                        - சிறிது
 • எண்ணெய்                                          - தேவையான அளவு
 • கடுகு, உளுந்து                                 - 1 ஸ்பூன்
 • கருவேப்பிலை                               - சிறிது
செய்முறை :-
 • வெண்டை காயை நன்றாக கழுவி ஈரம் போக துடைத்து பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது  எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய காயை போட்டு விழு விழுப்பு நீங்க வதக்க வேண்டும்.
 • காயை வதக்கும் போதே உப்பை சேர்த்து  வதக்கினால் விழு விழுப்பு தன்மை விரைவில் மாறி காய் உதிரியாக இருக்கும்.
 • உதிரியாக காய் வதங்கிய உடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நிறம் மாறும்வரை  வதக்க வேண்டும்.
 •  அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து சிறிது எண்ணெய்  ஊற்றி  சூடானதும் கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் கருவேப்பிலை சேர்த்து  வதக்கிய காயை போட்டு  அதனுடன் மிளகாய் பொடி,மசாலா பொடி சேர்த்து சுருள பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் சேர்க்க வேண்டும்.
 •  சேர்த்த தண்ணீர்  கொதித்து  வற்றும் பொது  சர்க்கரையை  சேர்த்து அதனுடன் எலுமிச்சையை பிழிந்து  விட வேண்டும்.

 • அனைத்தும்  நன்றாக சேர்ந்து கொதித்து சுருளும் போது அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். தீயல்  தயார்.

16 comments:

 1. நல்லதொரு சமையல் குறிப்பு... சர்க்கரை - 2 ஸ்பூன் (கண்டிப்பாக சேர்க்க வேண்டுமா..? - இது துணைவியாரின் கேள்வி)

  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. ருசிகரமான பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. எனக்கும் அதே சந்தேகம் தான் சர்க்கரை எதற்கு

  ReplyDelete
 4. சர்க்கரை சேர்க்காமலும் செய்யலாம் சகோ..தீயலுக்கு சர்க்கரை சேர்ப்பதுதான் ஸ்பெஷாலிடியே...சர்க்கரையும்,புளிப்பும் காரத்தோடு சேர்ந்தால் சுவை நன்றாக இருக்கும் சகோ:) கருத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. உடன் வருகைக்கு மிக்க நன்றி அண்ணா :)

  ReplyDelete
 6. சர்க்கரை சேர்ப்பதால்தான் இந்த குறிப்புக்கு தீயல் என்று பெயர்.சர்க்கரை சேர்ப்பதால் கலரும்,சுவையும் கூடும் பிரேம்:)

  ReplyDelete
 7. நல்லதொரு குறிப்பு. கரம் மசாலா பொடியைத்தான் மசால் பொடி என்று குறிப்பிட்டிருக்கிரீர்களா?

  ReplyDelete
 8. வெண்டைக்காய் நமக்கு பிடித்த காய்களுள் ஒன்று.,

  பழைய டெம்ப்ளேட் நன்றாக இருந்ததே அக்கா.. இது அத்தனை ஈர்ப்பாக எனக்கு தெரியவில்லையே (மன்னிக்க வேண்டும்)

  ReplyDelete
 9. எனக்கு இந்த டெம்ப்ளேட் பிடிச்சிருக்கே..:)தம்பி, கருத்திற்கு நன்றி.

  ReplyDelete
 10. வாங்க மனோ மேடம்..என் பிளாக்கிற்கு முதல் முறையாக வந்து ஆதரவு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மேடம்..!இந்த குறிப்பில் குறிப்பிட்ட மசால் பொடி பட்டை, சோம்பு,இலவங்கம் சேர்க்காத பொடி.நாங்க இதை குழம்பு பொடி,மசால் பொடின்னு சொல்வோம்.

  ReplyDelete
 11. சகோ நல்ல விளக்கம் முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 12. வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சசி.

  ReplyDelete
 13. வெண்டைக்காய் தீயல் அருமையான விளக்கமும் படமும் கலக்கலா இருக்கு அக்கா... சூப்பர் அக்கா... ஆமாம் அக்கா மசாலா பொடி என்றால் குழம்பு பொடி என்று கூறியுள்ளீர்கள் .... அந்த பொடி எப்படி தயார் செய்ய வேண்டும் அக்கா... சர்க்கரை போட்ட வெண்டைக்காய் ம்ம்ம்ம்ம்ம் சூப்பர் அக்கா....

  ReplyDelete
 14. குழம்பு பொடி - முழு உளுந்து,கொத்த மல்லி,சீரகம்,விரலி மஞ்சள்,மிளகு,சோம்பு,இவற்றை வறுத்து மிஷினில் அரைத்து வைப்பேன் விஜி.. பட்டை,இலவங்கம்,கல்பாசி,அன்னாசிபூ,சீரகம்,சோம்பு,மல்லி, இவற்றை பொடியாக அரைத்தால் இது கரம் மசாலா பொடி.
  வருகைக்கு நன்றி விஜி.

  ReplyDelete
  Replies
  1. எப்ப்போதுமே வெண்ணைடைக்காய்க்கு சிறிது சர்க்கரை சேர்ப்பதுண்டு.. வழு வழுப்பு குறையும்..

   சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

   Delete
 15. உங்க வலைப்பதிவுக்கு வரவே பயமா இருக்கு. இப்படி வகை வகையா சாப்பாடுகளைக் காட்டினால் நான் என்ன செய்வேன் .. வெண்டைக்காய் தீயல் என்னோட ஃபேவரட் ... !!

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)