கார்ன் சிக்கன்

18 comments
தேவையான பொருட்கள் :-
 • சிக்கன் - அரைகிலோ
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
 • மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
 • கார்ன் ப்ளார் - 2 ஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு
 • கார்ன் சிப்ஸ் - 50 கிராம்
 • முட்டை - ஒன்று
செய்முறை :-
 • சிக்கனை நன்றாக கழுவி உப்பு,மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், முட்டை சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஊறிய சிக்கனை போட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும்.
 • கார்ன் சிப்சை மிக்சியில் பொடி செய்து வைத்து கொண்டு வறுத்த சிக்கனை சூடாக இருக்கும் போதே சிப்ஸ் தூளில் போட்டு பிரட்டி எடுத்து வைக்க வேண்டும்.
 • கார்ன் சிக்கன் தயார்.

18 comments:

 1. சுவையான கார்ன் சிக்கன் அருமை...

  நன்றி...

  தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோ..:)

   Delete
 2. வணக்கம் சகோ எப்படி இருக்கிங்க. விடுமுறை ஸ்பெசல் சிறப்புங்க.

  ReplyDelete
  Replies
  1. நலம் சசி..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :)

   Delete
 3. வித்தியாசமான சுவை மிக்க குறிப்பைத் தந்திருக்கிறீர்கள் ராதா! செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேடம்..செய்து பாருங்கள்.. மொருமொருப்புடன் மிக நன்றாக இருக்கும்..:)

   Delete
 4. அருமையான குறிப்பு ராதா அக்கா ... செய்துபார்க்கிறேன்... நலமா அக்கா ... வெகு நாட்களாக வலைபக்கமே காணவில்லை....

  ReplyDelete
  Replies
  1. நலமே விஜி..:) வேலை பளுவினால் வலை பக்கம் வந்து குறிப்புக்கள் தர இயலவில்லை. செய்து பார்த்து சொல்லுங்கள் விஜி..அருமையாக இருக்கும். வருகைக்கு நன்றி..:)

   Delete
 5. சூப்பராக வந்திருக்கு ராதா..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆசியா..:)

   Delete
 6. கடையில் கிடைப்பதைப்போல் உள்ளது.சூப்பர்ப்!

  ReplyDelete
 7. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 8. சகோதரி, வணக்கம்.தங்கள் பதிவுகள் அருசுவையாக உள்ளன.வாழ்த்துக்கள்.
  குக்ஷ்பு இட்டிலியும்,காஞ்சிபுரம் ஸ்பெக்ஷலான இட்லியின் செய்முறை விளக்கம் தர வேண்டுகின்றோம்.
  நன்றியுடன்,
  -Piyes

  ReplyDelete
 9. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ..விரைவில் இட்லி செய்முறை தருகிறேன் சகோ..:) தொடர்வதற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 10. சகோ!, தங்களின் பதிலுக்கு மனமார்ந்த நன்றிகள்.எஙள் தொடர்பு உங்களின் ஆக்கபூர்வமான பதிவுகளுக்கு முழு ஆதரவுடன் தொடரும்.ஆவலிடன் காத்திருக்கிறோம்.
  நன்றியுடன்,
  -Piyes.

  ReplyDelete
 11. பார்க்கும் போது சாப்பிட தூண்டுகிறது முயற்சிக்க சொல்கிறேன் ...

  ReplyDelete
 12. நல்ல கிரிஸ்பியாக இருக்கு கார்ன் சிக்கன்

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)