கார்ன் சிக்கன்

17 comments
தேவையான பொருட்கள் :-
  • சிக்கன் - அரைகிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
  • மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
  • கார்ன் ப்ளார் - 2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கார்ன் சிப்ஸ் - 50 கிராம்
  • முட்டை - ஒன்று
செய்முறை :-
  • சிக்கனை நன்றாக கழுவி உப்பு,மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், முட்டை சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஊறிய சிக்கனை போட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும்.
  • கார்ன் சிப்சை மிக்சியில் பொடி செய்து வைத்து கொண்டு வறுத்த சிக்கனை சூடாக இருக்கும் போதே சிப்ஸ் தூளில் போட்டு பிரட்டி எடுத்து வைக்க வேண்டும்.
  • கார்ன் சிக்கன் தயார்.

17 comments:

  1. சுவையான கார்ன் சிக்கன் அருமை...

    நன்றி...

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோ..:)

      Delete
  2. வணக்கம் சகோ எப்படி இருக்கிங்க. விடுமுறை ஸ்பெசல் சிறப்புங்க.

    ReplyDelete
    Replies
    1. நலம் சசி..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :)

      Delete
  3. வித்தியாசமான சுவை மிக்க குறிப்பைத் தந்திருக்கிறீர்கள் ராதா! செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மேடம்..செய்து பாருங்கள்.. மொருமொருப்புடன் மிக நன்றாக இருக்கும்..:)

      Delete
  4. அருமையான குறிப்பு ராதா அக்கா ... செய்துபார்க்கிறேன்... நலமா அக்கா ... வெகு நாட்களாக வலைபக்கமே காணவில்லை....

    ReplyDelete
    Replies
    1. நலமே விஜி..:) வேலை பளுவினால் வலை பக்கம் வந்து குறிப்புக்கள் தர இயலவில்லை. செய்து பார்த்து சொல்லுங்கள் விஜி..அருமையாக இருக்கும். வருகைக்கு நன்றி..:)

      Delete
  5. சூப்பராக வந்திருக்கு ராதா..

    ReplyDelete
  6. கடையில் கிடைப்பதைப்போல் உள்ளது.சூப்பர்ப்!

    ReplyDelete
  7. சகோதரி, வணக்கம்.தங்கள் பதிவுகள் அருசுவையாக உள்ளன.வாழ்த்துக்கள்.
    குக்ஷ்பு இட்டிலியும்,காஞ்சிபுரம் ஸ்பெக்ஷலான இட்லியின் செய்முறை விளக்கம் தர வேண்டுகின்றோம்.
    நன்றியுடன்,
    -Piyes

    ReplyDelete
  8. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ..விரைவில் இட்லி செய்முறை தருகிறேன் சகோ..:) தொடர்வதற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. சகோ!, தங்களின் பதிலுக்கு மனமார்ந்த நன்றிகள்.எஙள் தொடர்பு உங்களின் ஆக்கபூர்வமான பதிவுகளுக்கு முழு ஆதரவுடன் தொடரும்.ஆவலிடன் காத்திருக்கிறோம்.
    நன்றியுடன்,
    -Piyes.

    ReplyDelete
  10. பார்க்கும் போது சாப்பிட தூண்டுகிறது முயற்சிக்க சொல்கிறேன் ...

    ReplyDelete
  11. நல்ல கிரிஸ்பியாக இருக்கு கார்ன் சிக்கன்

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)