கிரீன் சிக்கன் வறுவல்

6 comments
தேவையான பொருட்கள்
  • எலும்பு இல்லாத சிக்கன்       - அரை கிலோ
  • புதினா இலைகள்               - இரண்டு கைப்பிடி
  • பூண்டு                          - 10 இதழ்கள்
  • இஞ்சி                           - சிறிது
  • பச்சை மிளகாய்                - 3
  • பட்டை                         - சிறிது
  • கார்ன் ப்ளார்                   - இரண்டு ஸ்பூன்
  • உப்பு                           - தேவையான அளவு
  • எண்ணெய்                     - 250 மில்லி
செய்முறை
  • சிக்கனை நன்கு கழுவி வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
  • மிக்சியில் புதினாஇலைகள்,மிளகாய்,பட்டை,இஞ்சி,பூண்டு,இவைகளை போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
  • அரைத்த விழுதை சிக்கன் மேல் போட்டு அதனுடன் கார்ன் ப்ளார்,உப்பை சேர்த்து பிசற வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு முறுகலாக வந்தவுடன் எடுத்து ஒரு தட்டில் போட வேண்டும்.
  • சிக்கன் வறுவலில் தேவைப்பட்டால் மிளகு பொடி,எலுமிச்சை 2 துளி சேர்த்து கொள்ளலாம்.

6 comments:

  1. ஐ! சூப்பர் யம்மி சிக்கன்.நல்ல பக்குவமாக பொரித்தெடுத்து உள்ளீர்கள்.

    ReplyDelete
  2. புதினா மணத்துடன் அருமையாக இருக்குமே!

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி ஆசியா..

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ஸாதிகா..

    ReplyDelete
  5. சுவையான ரெசிபி. கிரீன் கலரில் சிக்கன் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வருகைக்கு மிக்க நன்றி பாக்யா..:)

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)