அறுசுவையில் இமா கொடுத்த கேப்ஸ்யூல் பூக்கள் பார்த்து நான் முயன்ற கிராப்ட் இது.இமா பூக்களின் நடுவே மகரந்தம் இல்லாமல் செய்திருந்தாங்க.அவங்க ஐடியாவில் நான் இதில் அதை முயன்றேன்.சிறு தொட்டி கிடைக்க வில்லை.நூலில் அதை முயன்று தொட்டி செய்தேன்.
தேவையான பொருட்கள்:-
- காலாவதியான கேப்ஸ்யூல் -6
- கேப்ஸ்யூல் உள்ளிருக்கும் துகள்கள் - சிறிது.
- பெவிகால் - 1
- மஞ்சள் நூல் - அரை மீட்டர்
- உபயோகமில்லாத பல்ப் - 1
- பச்சை நிற இன்சுலேசன் டேப் . - தேவையான அளவு
- காட்டன் பட் - 5
செய்முறை:-
- கேப்ஸ்யூலை பிரித்து உள்ளிருக்கும் மருந்து துகள்களை தனியாக பிரித்து வைக்க வேண்டும்.
- காட்டன் பட் நடுவில் வெட்டி இரண்டாக எடுத்து கொள்ளவேண்டும்.
- பிரித்த கேப்ஸ்யூலை சுற்றிலும் ஓரமாக வெட்டி பூ போல் விரித்து விட வேண்டும்.
- பட்ஸில் பெவிகால் தடவி கேப்ஸ்யூல் துகள்களில் புரட்டி எடுத்து காயவிட வேண்டும்.
- பல்பை எடுத்து மேல்புறம் உள்ள பின்னை அகற்றி விட்டு மஞ்சள் நூலை இறுக்கமாக சுற்ற வேண்டும்.
- சுற்றிய நூலில் முழுவதுமாக பெவிகாலை தடவி காயவிட வேண்டும்.
- காய்ந்த பின் பல்பில் இருந்து மஞ்சள் நூலை கையால் ஒரு சுற்று சுற்றி இழுத்தால் தனியாக கழன்று வந்துவிடும். இது பார்க்க தொட்டி போல் இருக்கும்.
- இன்சுலேசன் டேப்பை 2செ.மீ அளவு நறுக்கி அதன் உயர அளவிலேயே மடக்கி வைத்து கொள்ளவேண்டும்.
- காட்டன் பட் தண்டு பகுதியில் இன்சுலேசன் டேப்பை சுற்றி வைக்க வேண்டும்.
- தண்டு பகுதியில் உள்ள துளையில் மெல்லிய கம்பியை நுழைத்து வெட்டி விட வேண்டும்.
- தொட்டியில் தெர்மகோல் வைத்து மடக்கி வைத்த இன்சுலேசன் டேப்பையும்,பூக்களையும் தெர்மகோலில் சொருகி விட வேண்டும்.
- மினியேச்சர் பூத் தொட்டி தயார்.
நன்றி ராதா. அழகா இருக்குங்க.
ReplyDeleteதொட்டி செய்தவிதம் அருமை.
ReplyDeleteகுழந்தைகளின் மனதை ஒருமுகப்படுத்தவும் அவர்களின் கற்பனை திறனை வளர்க்கவும், மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தவும் இதை போன்ற பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி கொடுக்கலாம். நிச்சயம் நல்ல மாற்றத்தை குழந்தைகளில் இப்பயிற்சி ஏற்படுத்தும்.
ReplyDeleteஇயன்ற அளவு தங்கள் வீடுகளுக்கு அருகாமையிலுள்ள குழந்தைகளுக்கு இது போன்ற பொருட்களை தயாரிக்க பயிற்சி அளியுங்கள் சகோ.!
இமா..போஸ்ட் பண்ண எட்டாவது நிமிடத்தில் முதல் கருத்தை கூறியதற்கு மிக்க நன்றி.மகரந்தம் வைத்து பண்ணியதில் பூ நிலை மாறிவிட்டது.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பகிர்விற்கும்,மேலும் உற்சாகமூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றிசகோ.:)
ReplyDeleteஅழகோ அழகு. பாராட்டுக்கள்.
ReplyDeleteகலக்கிட்டீங்க ராதா......:) தொட்டி சூப்பர்.....:)
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா:)
ReplyDeleteவாங்க ரம்யா..ரெம்ப நாளாச்சு...வருகைக்கு நன்றி:)
ReplyDeleteLittle busy with job akka:)Thank you:)
ReplyDeleteபுது முயற்சி..ரொம்ப அழகா வந்திருக்கு..
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றி பாக்யா.
ReplyDeleteஉபயோகமில்லாத பொருட்களை வைத்து அருமையாக செய்துள்ளீர்கள் ! தொடருங்கள் ! நன்றி !
ReplyDeleteவருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDeleteஇமாவின் ஐடியாவா>?சூப்பர்.
ReplyDeletesuper Radha.
ReplyDelete