வாழை இலை மீன்

11 comments
தேவையான பொருட்கள்:-
 • மீன்                      -அரை கிலோ
 • சின்ன வெங்காயம்      - 10
 • மிளகாய் பொடி          - ஒரு ஸ்பூன்
 • மசாலா பொடி           - 2 ஸ்பூன்
 • பூண்டு                   - 4
 • இஞ்சி                    - சிறிது
 • புதினா,மல்லி இலை    - சிறிது
 • கருவேப்பிலை          - 2 ஆர்க்கு
 • தக்காளி                 - 2
 • பச்சை மிளகாய்         - 2
 • உப்பு                     - தேவையான அளவு
 • எண்ணெய்               - 2 ஸ்பூன்
  செய்முறை:-
  • மீனை நன்றாக கழுவி உப்பு,மிளகாய் பொடி,மசாலாபொடி சேர்த்து தனியாக வைக்க வேண்டும்.
  • வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை  நறுக்கி வைக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
  • சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா,மல்லி இலை தட்டிய இஞ்சி,பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.
  • வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் மசாலாவில் பிரட்டிய மீனை வைத்து அதனுடன் வதக்கிய கலவையை வைத்து நன்றாக கலந்து இலையை மடக்கி பேக் செய்ய வேண்டும்.

  • இதனை நீராவியில் வேக வைத்து எடுத்து பரிமாற வேண்டும்.

  11 comments:

  1. ஆஹா.., பசியை தூண்டுகிறதே :)

   ReplyDelete
  2. முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி சகோ..:)

   ReplyDelete
  3. வஞ்சிர மீன்தான் தனபாலன் சார்..எங்க வீட்டில் அவருக்கு கொலஸ்ட்ரால் பிராப்ளம் இருக்கிறதுனால ஆயிலில் வறுக்காமல் இப்படி செய்தேன்.வருகைக்கு மிக்க நன்றி சகோ.:)

   ReplyDelete
  4. ஆரோக்கிய குறிப்பு அனைவர்க்கும் அவசியமான குறிப்பும் கூட . தாங்கள் பதிவிடுவது எனக்கு தெரியவில்லை சகோ .

   ReplyDelete
  5. சூப்பராக் செய்து காட்டியிருக்கீங்க ராதா.

   ReplyDelete
  6. வருகைக்கும் பதிவிற்கும் மிக்க மகிழ்ச்சி சசி..:)

   ReplyDelete
  7. கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி ஆசியா.:)

   ReplyDelete
  8. மீன்
   சொல்லுபோதே ம்ம்ம்ம்
   நல்ல சமத்து வைத்து இருகிறீர்கள்
   சாப்பிட முடியலியே ம்(:

   ReplyDelete
  9. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி சகோ.:)

   ReplyDelete
  10. புது விதமாக இருக்கு ராதாராணி.அவசியம் டிரை பண்ணனும்

   ReplyDelete

  Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)