தேவையான பொருட்கள்:-
- முருங்கைகாய் - 10
- பச்சை மிளகாய் - 5
- தக்காளி - 2
- சின்ன வெங்காயம் - 10
- பாசிப்பருப்பு - 1 கப்
- சீரகம் - சிறிது
- தேங்காய் - சிறிது
- மல்லி,கருவேப்பிலை - சிறிது
- உப்பு,மஞ்சள் தூள் - சிறிது
- ஆயில் - 2 ஸ்பூன்
- கடுகு,உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
செய்முறை:-
- முருங்கைகாயை கட் பண்ணி சிறிது நீர் விட்டு வேக வைக்க வேண்டும். வெந்த காயை கீறி உள்ளிருக்கும் சதை பகுதியை தனியாக எடுக்க வேண்டும் .
- பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம்,தக்காளியை நறுக்கி வைக்க வேண்டும் .
- அடுப்பில் வாணலியை வைத்து ஆயிலை ஊற்றி கடுகு , உளுந்து போட்டு வெடித்ததும் நறுக்கிய பச்சை மிளகாய்,வெங்காயம் ,தக்காளி,கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும் .
- நன்றாக வதங்கிய பின் முருங்கைகாய் சதை பகுதியை போட்டு வேக வைத்த பாசிப்பருப்பையும் போட்டு உப்பு,மஞ்சள் பொடியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும் .
- கடைசியாக அரைத்த சீரகம்,தேங்காயை சேர்த்து கிளறி தண்ணீர் சுண்டிய உடன் உப்பு சரி பார்த்து இறக்கி விட வேண்டும் .
- முருங்கைகாய் வேக வைத்த தண்ணீரில் தக்காளி ரசம் செய்தால் சுவையாக இருக்கும் .
இதுவரை வீட்டில் செய்ததில்லை...
ReplyDeleteBookmark செய்து விட்டேன்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
(தளம் அழகாக உள்ளது)
உடன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ .. உங்கள் துணைவியிடம் சொல்லி செய்து பார்க்க சொல்லுங்கள்.
ReplyDeleteருசிகரமான பதிவு + அழகான படங்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள். vgk
வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அண்ணா..
ReplyDeleteசூப்பர் சத்தான கொத்சு.
ReplyDeleteவித்தியாசமாய் இருக்கிறது ராதா! முருங்கைக்காயின் சதை எடுத்து செய்வதால் நிச்சயம் மிகுந்த சுவை இருக்கும்! செய்து பார்த்து சொல்லுகிறேன். எப்படி உபயோகிப்பது! சாதத்திற்கு பிசைந்து கொள்வதா அல்லது தோசைக்குத் தொட்டுக்கொள்வதா?
ReplyDeleteஇப்படி செய்துகொடுத்தால் நான் சும்மாவே சாப்பிடுவேன் அக்கா! :)
Deleteராதா அக்கா கொத்சு ரொம்ப கம்மியா இருக்கே என் ஒரு ஆளுக்கே பத்தாது போலிருக்கே! என்னைய சாப்பிட கூப்பிட்டீங்க உங்களுக்கு கொத்சு இருக்குற கிண்ணம் மட்டும் தான் கிடைக்கும் :)
ReplyDeleteவருகைக்கு நன்றி ஆசியா .
ReplyDeleteமனோ மேடம்..இதை சாதத்துக்கு வைத்தும் சாப்பிடலாம்..தோசை,சப்பாத்திக்கு வைத்தும் சாப்பிடலாம்..செய்து பாருங்க மேடம் . வருகைக்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி ..
ReplyDeleteதம்பி.. இந்தியா வரும்போது ஒரு நடை அம்மா,அப்பாவோட அக்கா வீட்டுக்கும் வாங்க ..
ReplyDeleteநல்லா சாப்பிடுங்க..:)வருகைக்கு மிக்க மகிழ்ச்சி வரலாற்று சுவடுகள் தம்பி..
வித்தியாசமாய் இருக்கிறது அக்கா. முருங்கைக்காயின் சதை எடுத்து செய்வதால் நிச்சயம் மிகுந்த சுவை இருக்கும்!
ReplyDeleteசூப்பர் அக்கா.
வருகைக்கு நன்றி விஜி..:)
ReplyDeleteஆமாங்க வித்தியாசமாய் இருக்கு செய்து பார்த்துவிடுவோம்.
ReplyDeleteசெய்து பாருங்க சகோ.. வருகைக்கு மிக்க நன்றி .
ReplyDeleteகம கம்ம்ன்னு வாசனை இங்க வரை அடிக்குது
ReplyDeleteவாங்க ஜலீலா...உங்க வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.:)
ReplyDeleteHi Radha ,
ReplyDeleteKothsu looks Great !!!
Perfect presentation :)
Keep on Dear...
At your free time do visit my blog
www.southindiafoodrecipes.blogspot.in
முதல்முறையாக எனது கிச்சனுக்கு வந்து கருத்தும் ஊக்கமும் தந்த புனிதாவிற்கு மிக்க நன்றி..:)
ReplyDeleteMadam, I am sharing an award with you.
ReplyDeleteLink: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html
Kindly accept it.
vgk
வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteLovely blog....
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com