கரிசல் தோட்ட கருங்குருவி

20 comments
ஷாப்பிங் போறது,டூர் போறது,இதெல்லாம் ஒரு மனுஷனோட செக்கு மாட்டு வாழ்க்கைக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறதுதான்..ஆனா அதை விட சந்தோஷம் ஒரு தோட்டத்தில அறுவடை செய்யும் நேரம் சுற்றிலும் பறக்கும், ஊர்ந்து செல்லும் ஜீவராசிகளை பார்ப்பது நல்ல பொழுதுபோக்கு..! வாங்க... சோளம் விதைச்ச தோட்டத்துக்கு போவோம்.சோளதட்டையை பார்த்தாலே சிறு வயதில் கேட்ட கதைதான் நினைவுக்கு வரும்.
செல்லமா வளர்த்த ஒரு பெண் கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு போனாளாம்.புகுந்த வீட்டில் மாமியார் பின்புற தோட்டத்தில் மாமரத்தில் மாங்காய் பறிக்க சொல்ல மருமகள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு "என்று சொல்லி வேலை செய்யாமல் இருக்க, மறுநாள் விடியும் பொழுது துளசி மாடத்திற்கு விளக்கு வைக்க மாமியார் சொல்ல, மருமகள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு "என்று சொல்லி இருக்கிறாள். மாமியாருக்கு "அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பியும் உதவ மாட்டான்" பழ மொழி நினைவுக்கு வர பாடத்தை ஆரம்பிச்சிட்டாங்க...மருமகளிடம் வீட்டு மூலையில் சார்த்தி இருக்கும்சோளதட்டை யில் ஒன்று எடுத்து வர சொல்ல, அவள் "எனக்கென்ன தெரியும் செல்ல பிள்ளைக்கு " என்று கூற மாமியார் எழுந்து போய் சோளத்தட்டையை உருவி சுத்தி சுத்தி அடிக்க மருமகள் அலறி கொண்டே ஐயோ! அது மாமரம்,இது மன்னவன் கோயில்,சுத்தி அடிக்கிறது சோளதட்டைன்னு சொல்லி அன்றில் இருந்து சொன்ன வேலையை தட்டாமல் செய்தாளாம்.
தோட்டம் வந்தாச்சு...crop cutter ல சோளத்தை கட் பண்ணி போடுறதை பாத்துட்டு அப்பிடியே ஒரு சுத்து வருவோம்.
எல்லாரும் போயிடுங்க....crop cutter வருது..ஜாக்கிரதை..!
இந்த கட்டிங் மெஷின் சோளத்தோட சோளமா நம்மையும் சேர்த்து சுருட்டி போட்டிருக்கும். யப்பா.. ஜஸ்ட் மிஸ்ஸிங்.. நினைத்தாலே ஈரக்குலை நடுங்குது..!
உங்க சோளத்தை திங்கலையே ... தேனைதானே குடிச்சேன்..
ரெக்கைய வெட்டிடீங்களே.. பாவிகளா..!
இந்த முருங்கக்காயை காய விட்டுட்டு போறா மாதிரி இந்த சோளத்தையும் காய விட்டுட்டு போலாமில்ல..நாங்க பிழைச்சிக்குவோம்..
இது என்ன கொடுமை! ஒடி ஒடி போட்டோ எடுக்கிறாங்க.. ச்சீ! வெட்கமா இருக்கு.. இலைக்கு பின்னாலே ஒளிஞ்சுடுவோம்...
அந்த கருத்த மாமா வந்திட்டார் ...எல்லாரும் ஒடுங்க ....! கருத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்....பாட்டு வேற பாடி பயம் காட்டறார்..இன்னிக்கு யாரு டிக்கெட் வாங்க போறோமோ......ஆண்டவா..!காப்பாத்தப்பா...!!
ஆண்டவன் " ஒரு கதவை மூடினா இன்னொரு கதவை திறப்பான்" தெரியுமில்லே..நீங்க சோளத்தை எடுத்துட்டு போனா....அட போய்யா.. நாட்டு சோளம் இருக்கில்ல எங்களுக்கு..

20 comments:

 1. :) nice photos with interesting captions! :)

  ReplyDelete
 2. ராதா கிச்சன்ஸ்ல புகைப்பட தொகுப்பும் வர ஆரம்பிச்சாச்சா? :-)

  சோளக்காட்டுக்குள் போன அனுபவம் தந்தது!

  ReplyDelete
 3. சூப்பர் அக்கா படங்கள் அனைத்தும் அருமை. ம்ம்ம்ம் சோளக்கொல்லை அனுபவம் அருமை. இன்னும் மாமியார் மருமகள் கதை அருமை....

  ReplyDelete
 4. புகைப்படங்களும் வர்ணனையும் மிக அழகு!

  ReplyDelete
 5. புகைப்படங்களுக்கு ஏற்ற கருத்துக்கள்! காமெடியில் கலக்குகிறீர்களே அக்கா :)

  உங்களுக்கு ஒன்று தெரியுமா.., நாங்கள் இன்னும் எங்கள் கிராம புறங்களில் crop cutter உபயோகப்படுத்த ஆரம்பிக்கவில்லை :)

  ReplyDelete
 6. படங்களும் அதற்கேற்ற கருத்தும் அசத்தல் சகோதரி... பாராட்டுக்கள்...

  நன்றி…

  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
 7. பதிவை போட்ட அடுத்த கணமே பதிவை பகிர்ந்த மகிக்கு எனது நன்றிகள்.:)

  ReplyDelete
 8. ஆமி..நலமா.. ரெம்ப நாளா காணலியே.... உடன் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி :)

  ReplyDelete
 9. பதிவை ரசித்து படித்து கருத்தை சொன்ன விஜிக்கு நன்றி ..:)

  ReplyDelete
 10. மனோ மேடம்..ஊக்கத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி:)

  ReplyDelete
 11. வரலாற்று சுவடுகள் தம்பி..இந்த மெஷின் வாசுதேவநல்லூரல இருந்து R&D வேலைக்காக இன்னிக்கு அருப்புக்கோட்டை ராதா இஞ்சினியர்ஸ் கம்பெனிக்கு வருது..வீடியோல மெஷினை ஆராயுறது எங்க வீட்டு மாமாதான்..உங்க கிராமத்துல கதிர் அறுக்கனும்னா சொல்லுங்க...மெஷினை சரி பண்ணியதும் கிராமத்துக்கு அனுப்பிருவோம் :)

  ReplyDelete
 12. தனபாலன் சார்... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.:)

  ReplyDelete
 13. சகோ வயல் வெளியில் ஓடி பிடித்து விளையாடிய அனுபவம் வருகிறது. அருமை சகோ.

  ReplyDelete
 14. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ..:)

  ReplyDelete
 15. ராதா கிச்சன் தானா அல்லது வேறு ப்ளாக்கான்னு ஒரு சந்தேகம்,ஒரு மாதம் ஊர் போய் திரும்பி வந்தால் சூப்பர் சூப்பர் பகிர்வுகள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. கருத்திற்கும் ,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஆசியா..

  ReplyDelete
 17. சோளம் விதைச்ச தோட்டத்துக்குக்கூட்டிப்போய் அருமையான காட்சிகள் ..பாராட்டுக்கள் !

  ReplyDelete
 18. ராஜி மேடம வருகைக்கு மிக்க நன்றி .

  ReplyDelete
 19. அடடா! கதைகள் இரண்டும் சூப்பர். ;) ரசித்தேன்.

  ReplyDelete
 20. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி இமா..:)

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)