தேவையான பொருட்கள்:-
- பச்சரிசி மாவு - 250 கிராம்
- சர்க்கரை - 150 கிராம்
- தேங்காய் துருவல் - அரை மூடி
செய்முறை:-
- பச்சரிசி மாவை லேசாக வறுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு கட்டி இல்லாமல் உதிரியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
- புட்டு குழாய் பாத்திரத்தை எடுத்து அடியில் உள்ள பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.
- புட்டு குழாயில் சிறிது வெண்ணெய் எடுத்து உட்புற பகுதியில் தடவி சிறிது மாவை எடுத்து குழாயில் போட்டு அதன் மேல் சிறிது தேங்காய் துருவல் அதன் மேல் சிறிது சர்க்கரை என போட்டு மூடி வைத்து மூடி புட்டு குழாய் பாத்திரத்தின் மேல் புட்டு குழாயை வைத்து ஆவியில் மாவு வேகும் வரை சுமார் 10 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
- புட்டு குழாயை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்து பிளாஸ்டிக் குச்சியினால் புட்டு மாவை அச்சாக குழாயில் இருந்து வெளியே தள்ள வேண்டும்.குழாய் புட்டு தயார்.
- இதை வாழை பழத்துடனோ,கடலை கறியுடனோ சாப்பிட சுவையாக இருக்கும்.
வீட்டில் பலமுறை முயற்சித்தும், உதிரி உதிரியாகத் தான் வரும்... உங்கள் செய்முறை செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...
ReplyDeleteசெய்து பாருங்கள் சகோ..நன்றாகவே வரும்.வருகைக்கு மிக்க நன்றி.
Deleteவடிவான குழாய்புட்டு.பார்க்கவே சாப்பிடத்தோன்றுகிறது.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸாதிகா..
Deleteரொம்ப பசிக்கிற மாதிரி இருக்கே...ரெண்டு குழாய் புட்டு பார்சல்ல்ல் :)
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி தம்பி..பார்சல் அனுப்பிட்டேன்.:)
Deleteஅப்படியே சாப்பிடுவேன் :-)
ReplyDeleteடெம்ளேட் அருமை...
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆமி..:)
Deleteசகோ பார்க்கும் போதே ஆசையாக இருக்கிறது இன்னமும் ஒரு முறை கூட சாப்பிட்டது இல்லை.
ReplyDeleteஒரு முறை செய்து பாருங்கள் சசி..பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Deleteபார்க்கவே சாப்பிடத்தோன்றுகிறது. அருமை... அருமை...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி விஜி..:)
Deleteகுழாய் பிட்டு
ReplyDeleteவாரத்தில் ஒருமுறை செய்து சாப்பிடிக்றேன் சகோ
செமுறை விளக்கம் நம் தோழமைகளுக்கு
நல்ல பயனுள்ளதாக இருக்கும்
நன்றி சகோ
கருத்திற்கும் மிக்க நன்றி சகோ
DeleteRomba Nalla irukku... Seithu parka aasai....
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ்..:)
ReplyDeleteசகோ பதிவர் சந்திப்புக்கு வாருங்கள் தங்களை காணும் ஆவலில் இருக்கிறேன்.
ReplyDeleteஇது வரை எங்கள் வீட்டில் செய்யாத ஒரே உணவு வகை இது தான். இதைப் பார்த்ததும் முயற்சிக்கலாம் என்றிருக்கிறேன்.
ReplyDeleteஅருமை தொடர வாழ்த்துக்கள்