தலைமுறை பேசும் பொக்கிஷம்

22 comments


தோழி ஷாதிகாவின் தொடர் பதிவை படித்து எனது கருத்தை பகிர்ந்ததில் ஸாதிகாவும் எனது கருத்தை படித்துவிட்டு என்னை இப்பதிவை எழுத தூண்டினார்.


என்னிடம் பொக்கிஷமாக பாதுகாக்க படும் பொருட்களில் இப்பொழுதும் உபயோகத்தில் இருப்பது இந்த சிணுக்கோலி.. செவ்வாய், வெள்ளிகளில் தலை குளித்து சிக்கு எடுப்பது இன்றும் இந்த சிணுக்கோலியால்தான். இதன் வயது 150க்கு மேல் இருக்கும். நான் 7 வயது சிறுமியாக இருந்த போது எனது தாத்தாவின் அம்மா இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் வயது 100 ஐ நெருங்கும் சமயம். அந்த பாட்டி இறந்தது எனக்கு லேசாக நினைவில் இருக்கின்றது. அந்த பாட்டி பயன்படுத்திய இந்த வெள்ளி சிணுக்கோலி 3 தலைமுறை கடந்து இப்பொழுது என்னிடம் உள்ளது.


சங்கு இதுவும் பாட்டி பயன்படுத்தியதுதான்.அன்று பாட்டி பூஜையில் வைத்து வணங்கிய சங்கு இன்று பாட்டியின் நினைவாக என் வீட்டு பூஜை அறையில் உள்ளது.


சின்ன டப்பா...இது என் அம்மாவின் அப்பா உபயோக படுத்தியது. இந்த டப்பா தாத்தாவின் ஞாபகமாக சும்மா வைத்துள்ளேன் . காரணம் இந்த டப்பா இந்திய சுதந்திரத்துக்கு முன் வெள்ளையன் ஆட்சியில் விற்பனைக்கு வந்த ஷேவிங் க்ரீம் டப்பா.. அந்த காலத்தில் க்ரீம்மாக இல்லாமல் கட்டி சோப்பாக வந்ததாம்.
இந்த தாத்தாவை பற்றி அக்கறை பச்சை பதிவில் எழுதியுள்ளேன்.


அழகிய கும்பா..இது அம்மாவின் அம்மா  வழி வந்தது. அந்த பாட்டி இந்த கும்பாவை அம்மாவிற்கு கொடுக்க அம்மா அதை அழகுக்காக எதற்கும் பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்திருந்தார்கள். இப்பொழுது நான் இதை ஷோகேஷில் அழகுக்காக வைத்துள்ளேன்.


போட்டோ.. சமீபத்தில் தான் என் மகன் இந்த போட்டோவை இரு தலைமுறைகள் உள்ள போட்டோ இது, எனக்கு வேண்டும் என்று அம்மா வீட்டில் இருந்து எடுத்து வந்தது. எனது அம்மா ,அப்பாவின் கல்யாண போட்டோ.


திருக்கை.. திருகைன்னும் சொல்லுவாங்க. வரும்  தலைமுறையினருக்கு இதன் பயன் பாடே தெரியாமல் போகலாம். பல வருடங்களாக பயன் படுத்தாமல் இருந்த இதை அம்மாவிடம் இருந்து நான் வாங்கி பயன் படுத்தாமல் பழைய பொருட்களின் நினைவு சின்னமாக வைத்துள்ளேன்.

22 comments:

  1. நல்லா இருக்குங்க உங்க கலெக்ஷன்.. கடைசி படத்தில் இருப்பது "ராய்க்கல்"-னு சொல்லுவோம் எங்க ஊர்ல. தலை கோதுவது "மைகோதி"..:)
    கும்பா டிசைன் அழகா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. // கடைசி படத்தில் இருப்பது "ராய்க்கல்"-னு சொல்லுவோம் எங்க ஊர்ல.//
      ''ராய்க்கல்' இந்த வார்த்தை ஒரு நிமிஷம் பயமுறுத்திடிச்சே..:)
      " மைகோதி" தலையில டை அடித்து கோதிவிட்டா மைகோதி..;)) சரியாத்தான்
      பேர் சொன்னீங்க மகி. வருகைக்கு நன்றி.

      Delete
  2. உண்மையிலே அரிய பொக்கிசங்கள்...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி தனபாலன் சார்..:)

      Delete
  3. அருமையான பொக்கிஷப்பகிர்வுகள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அண்ணா..:)

      Delete
    2. அற்புதமான பொக்கிஷங்கள் பாதுகாப்பாக வையுங்கள்.

      Delete
    3. வருகைக்கு நன்றி சசி..:)

      Delete
  4. ஆஹா ! மிக அருமையான பொக்கிஷங்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி ராதா..

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும் வருகைக்கும் நன்றி ஆசியா..:)

      Delete
  5. ராதா உங்க பகிர்வையும் என் தொடரில் இணைத்துக் கொள்கிறேன் பா.அனைவரும் வாசிக்க வசதியாக இருக்கும்.மிக்க நன்றி.
    http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.html

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி ஆசியா..:)

    ReplyDelete
  7. அருமையான பொக்கிஷங்கள். உங்கள் சிணுக்கோலி போல் என் அம்மாவிடம் இருந்தது பழமையின் மதிப்பு தெரியாமல் அதை கொடுத்து விட்டோம். மாமியார் வீட்டிலும். அம்மாவீட்டிலும் இன்னும் ஆட்டுக்கல், அம்மி, திருவை எல்லாம் காட்சி பொருளாய் இருக்கிறது பழமையை நினைவு படுத்திக் கொண்டு.


    ReplyDelete
  8. பொக்கிஷப் பகிர்வுகள் அருமை..

    ReplyDelete
  9. சிணுக்கோலி நான் பார்த்ததே இல்லைங்க ..இப்ப தான் பார்கிறேன்
    எல்லா பொக்கிஷங்களும் ரொம்ப அருமை ...

    ReplyDelete
  10. வாங்க ஏஞ்சலின் ..:) முதன் முதலா என் வலைக்கு வந்து கமெண்ட் போட்டிருக்கீங்க.. மிக்க மகிழ்ச்சி..சிணுக்கோலி பார்த்தது இல்லையா..! அப்போ தலை குளித்தால் hair dryer வெறுமே உபயோக படுத்தி தலை வாரி கொள்வீர்களா.. நான் இப்பவும் சிணுக்கோலி உபயோகிக்கிறேன்..வருகைக்கு மிக்க நன்றி..:)

    ReplyDelete
  11. i liked all u r collections , my fav kumba than , like u i also like to collect but no luck still.nice post

    ReplyDelete
  12. உங்கள் பொக்கிஷங்கள் அருமை. சிணுக்கோலி கண்டதே இல்லை.
    பத்திரமாக வைத்திருங்கள்.

    ReplyDelete
  13. சிணுக்கோலி பயன்படுத்தாம உங்க முடியை அழகா வச்சிருக்கீங்க இமா. வருகைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ;)) பயன்படுத்தாமலில்லை. பயன்படுத்துவது இயற்கை தந்த சிணுக்கோலி - விரல்கள். :-)

      Delete
  14. பதிவுக்கு நன்றி சகோ.உங்கள் பொக்கிஷங்கள் அனைத்தும் அருமை.

    சிணுக்கோலி இதுவரை நான் பார்த்திராத்து.முடியை வலிக்காமல் சிக்கெடுக்கலாம் போலும்.

    திருகை..இப்படி மாதிரி பொருட்கள் வீட்டை அடைத்துக்கொண்டுள்ளது என்று அனைத்தையும் டிஷ்போஸ் செய்த தருணத்திற்காக இப்போது வருந்துகிறேன்.

    அருமையான பதிவு .

    ReplyDelete
  15. உண்மையிலே அரிய பொக்கிசங்கள்..

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)