வள்ளிக்கிழங்கு போண்டா

7 comments
தேவையான பொருட்கள்:-
  • வள்ளிக்கிழங்கு                          - அரைக்கிலோ
  • மைதா                                         - 100 கிராம்
  • அரிசி மாவு                                - 100 கிராம்
  • பூண்டு                                        - 2 பல்
  • சின்ன வெங்காயம்                 - 15
  • மிளகாய் பொடி                        - ஒரு ஸ்பூன்
  • உப்பு                                            - சிறிது
  • மிளகு பொடி                            - அரை ஸ்பூன்
செய்முறை:-
  • வல்லிகிழங்கை மண் போக கழுவி நன்றாக வேக வைத்து தோல் உரித்து தனியாக வைக்க வேண்டும்.
  • வெங்காயத்தை கட் பண்ணி பூண்டையும் பொடியாக நறுக்க வேண்டும்.
  • கிழங்கை நன்கு மசித்து அதனுடன் வெங்காயம், பூண்டு, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து பிசைந்து உருண்டைகளாக்கி ரெடியாக வைக்க வேண்டும்.
  • மைதா, அரிசி மாவு, மிளகுபொடி, உப்பு  சேர்த்து நீரில் தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து பொரிக்க தேவையான எண்ணெய்யை ஊற்றி சூடாக்க வேண்டும்.
  • எண்ணெய் சூடான உடன் கிழங்கு உருண்டைகளை எடுத்து மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு பொன்னிற மானவுடன் எடுக்க வேண்டும்.
  • வள்ளிக்கிழங்கு போண்டா தயார்.
  • மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.

7 comments:

  1. சூப்பர் போண்டா, பார்க்க சுசியம் போல் உள்ளதே!

    ReplyDelete
    Replies
    1. மேல்மாவிற்கு கடலை மாவு சேர்ப்பார்கள்... நான் மைதாவை சேர்த்து செய்திருக்கிறேன் ,அதனால் கலர் உங்களுக்கு சுகியம் போல் தெரிகிறது.. வருகைக்கு நன்றி ஆசியா..

      Delete
  2. நல்லா இருக்கு... குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி சகோ..

      Delete
  3. சூப்பர் போண்டா..... ருசியோ ருசி தான்.
    செய்முறை நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றியண்ணா..

      Delete
  4. எனக்கும் சுழியன் போல மிக அழகாய்த் தெரிகிறது ராதா!

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)